முதியோர் உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
*******************************************************************
சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோமற்றும் விதவைகளுக்கு மாதாந்திர உதவியாக ரூ.1000/- வீதம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதரவு ஏதும் இல்லாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசினுடைய இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இத் திட்டத்தில் ஆதரவற்ற தகுதியுடைய முதியோர்களான ஆண், பெண் அனைவரும் சேரலாம். இதற்குரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன், குடும்ப அட்டை நகல், அரசு மருத்துவமனை அல்லது அரசு பதிவுபெற்ற டாக்டரால் வழங்கப்பட்ட வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்பிறகு அதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் நேரில் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு வந்து விண்ணப்பத்தில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள் உண்மைதானா? என்று ஆய்வு செய்வார்கள். உண்மைதான் என்று தெரிந்தால், விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை வழங்கலாம் என்று வருவாய் வட்டாட்சியருக்கு, கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்வார்.
வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரருக்கு பணவிடை (Money Order) மூலமாக மாதந்தோறும் ரூ.1000/- வழங்க உத்தரவிடுவார்கள். விண்ணப்பதாரர் தனது ஆயுட்காலம் முழுவதும் இதனை பெற முடியும்.
தற்போது (2015) இந்த திட்டத்தில் சில மாறுதல்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
* வருமான வரம்பு, 5,000 ரூபாய்க்குள் என்று இருந்ததை, 50 ஆயிரம் ரூபாய்க்குள் என, 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன்பெறலாம்.

* வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால், மாதாந்திர உதவி பெற, முதியோர் தகுதி பெறுவர்.
* எல்லா விதமான உதவித்தொகை திட்டத்திலும், 'ஆதரவற்றோர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளில், 'வேலை செய்ய முடியாத தன்மை' என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. 60 சதவீத பாதிப்பு உள்ள, அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டோர் மாதாந்திர உதவி பெற, 'மகன், மகள் ஆதரவு இல்லாமல் இருந்தால்...' என்ற விதிமுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
நன்றி: தினமலர் நாளிதழ் - 22.04.2015
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.