IES - Indian Economic Service
இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை தீட்டுவதில், நீங்கள் பங்கேற்கவும், பொருளாதாரம் சார்ந்த துறைகளில் ஓர் உயரிய பொறுப்பை வகிக்கவும் உங்களுக்கு ஆசை இருக்குமானால் அல்லது பொருளாதாரத்தில் அதீத ஆர்வம் இருக்குமேயானால், நீங்கள் ஐ.இ.எஸ்., ஆக கனவு காணலாம்!
உலகளவில் பொருளாதார வளர்ச்சியை கண்காணித்து, அவற்றை மதிப்பீடு செய்து, நம் நாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விலைகளை நிர்ணயம் செய்வதிலிருந்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை கையாள்வதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நாட்டின் தேசிய மற்றும் மாநில நிர்வாகங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தான் நாட்டின் பொருளாதார திட்டங்களை வகுப்பதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கும். இத்தகைய பொறுப்பு மிக்க அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வே ‘இந்தியன் எக்னாமிக் சர்வீஸ்’!
யார் எழுதலாம்?
இந்திய பொருளாதாரப் பணிக்கான தேர்வுகளை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனோமெட்ரிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, இளநிலை பட்டப் படிப்பில் பொருளாதாரம், படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுத முடியாது.
வயது வரம்பு:
ஐ.இ.எஸ்., தேர்வு எழுத ஜனவரி 1ம் தேதி கணக்கீட்டின்படி, 21 முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அரசாங்க விதிமுறைப்படி, வயது வரம்பில் தளர்வும் உண்டு.
பணி விபரம்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் இத்தேர்வு மூலம், ‘ஹயர் அட்மினிஸ்ரேடிவ் ஆபிசர்/பிரின்சிபல் அட்வைசர் மற்றும் சீனியர் எகனாமிக் அட்வைசர், சீனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடு/எகனாமிக் அட்வைசர் ஆகிய உயர்நிலைபொறுப்புகளை வகிக்க முடியும்.
ஆரம்ப நிலையில் ‘குரூப்-4’ பிரிவின் கீழ் ஜூனியர் டைம் ஸ்கேல், அசிஸ்டன்ட் டிரைக்டர் மற்றும் ரீசர்ச் ஆபிசர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இவற்றில், 60 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், 40 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
தேர்வு முறைஆயிரம் மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 200 மதிப்பெண்களுக்கு ’வைவா’ எனப்படும் நேர்முகத் தேர்வு, ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு: பொது ஆங்கிலம் (100 மதிப்பெண்கள்),
பொது அறிவு (100 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 1 (200 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 2 (200 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 3 (200 மதிப்பெண்கள்) மற்றும்
இந்திய பொருளாதாரம் (200 மதிப்பெண்கள்).
பொது அறிவு (100 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 1 (200 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 2 (200 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 3 (200 மதிப்பெண்கள்) மற்றும்
இந்திய பொருளாதாரம் (200 மதிப்பெண்கள்).
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் பல்வேறு பயிற்சிகள், இலவசமாக வழங்கப்பட்டு மதிப்புமிக்க ஐ.இ.எஸ்., பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகிறனர்.
மேலும் விவரங்களுக்கு: www.ies.gov.in
No comments:
Post a Comment