disalbe Right click

Monday, July 31, 2017

ரேசன் கார்டு - புதிய விதிகள்

ரேசன் கார்டு - புதிய விதிகள்
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது!
சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்து விட்டதால் இனி ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இதன்படி யார் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்களும், ரேஷன் கார்டுகளு்ம கிடையாது என்பது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
விதிகள் விவரம்: 
⧭ வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.
⧭ தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
⧭ ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.
⧭ மத்திய/ மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/ மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
⧭ பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
⧭ நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் 
(ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)
⧭ ஏசி, பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும் பொருள்கள் வழங்கப்படமாட்டாது
⧭ 5 ஏக்கருக்கு மேல் நில வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது.
இருப்பினும் இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தவே செய்யும் என்றே கூறப்படுகிறது.
Posted By: Lakshmi Priya
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » 31.07.2017

85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது

85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது
சென்னை: மருத்துவ படிப்பில், மாநில பாட திட்ட மாணவர்களுக்காக, 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை, 31) உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதி உத்தரவு
நீட் தேர்வை தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில் மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய தர வரிசை பட்டியல் தயார் செய்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை நடத்த கூடாது உள் ஒதுக்கீடு இன்றி ஏற்கனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டார்.
அரசு மேல் முறையீடு
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் உத்தரவு பிறப்பித்தது. காலம் தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கையை உடனே நடத்தும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நன்றி : தினமலர் - கல்வி மலர் - 31.07.2017

Saturday, July 29, 2017

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'
புதுடில்லி:''வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது; வரதட்சணை வழக்கில், விசாரணை நடத்தாமல், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது,'' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
வரதட்சணை தடுப்பு சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள்,ஆதர்ஷ் குமார் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு .முன் நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. 
வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டால், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது
குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்த பின்தான், கைது நடவடிக்கையைபோலீசார் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக, மாவட்டந்தோறும், ஒன்று அல்லது இரண்டு குடும்பநல கமிட்டிகளை,  “மாவட்ட சட்ட சேவை ஆணையம்”  அமைக்க வேண்டும்.
வரதட்சணை தொடர்பாக புகார்களை பெறும் போலீசார், துணை கலெக்டர்கள்  அதை, மாவட்ட குடும்ப நல கமிட்டியிடம், அனுப்ப வேண்டும்.
இந்த புகார்களை, மாவட்ட குடும்பநல கமிட்டி விசாரித்து, ஒரு மாதத்தில், புகாரை அனுப்பிய அதிகாரியிடம்அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பநல கமிட்டியில், மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதை, ஆண்டுக்கு ஒரு முறை, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டியில், சட்ட ஆலோசகர்கள், சமூக சேவகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், அதிகாரிகளின் மனைவியரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
ஆனால், வழக்கில் சாட்சிகளாக,கமிட்டி உறுப்பினர்களை சேர்க்க கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.07.2017   

Friday, July 28, 2017

பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!

பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!
கடந்த 20 ஆண்டுகளில், பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு வங்கிகள் கைகொடுப்பதே. குறிப்பாக, பெண் தொழில்முனைவோருக்கு சிறப்புக் கடன் திட்டங்கள் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெண்கள் எந்த வகையான தொழில்களை ஆரம்பிக்கலாம், அதற்கான வங்கிக் கடனுதவியை எப்படிப் பெறலாம் என விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா நிறுவனத்தின் மண்டல அலுவலக முதன்மை மேலாளர் தங்கம்.
மதிப்புக் கூட்டுப் பொருள்களின் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. பனை, வாழை, தென்னை, பாக்கு போன்ற மரங்களில் இருந்து எக்கச்சக்கமான மதிப்புக் கூட்டுப் பொருள்களை ஆண்டு முழுக்க உற்பத்தி செய்யலாம். சில நாள்கள் பயிற்சி எடுத்தால் போதும், இந்த மதிப்புக் கூட்டுப் பொருள்களை எளிதில் செய்யத் தொடங்கிவிடலாம்.
அதேபோல, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டிசைனிங், டிரெஸ் டிசைனிங், ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட், கட்டட வடிவமைப்பு, ஜுவல்லரி டிசைனிங் உள்ளிட்ட டிசைனிங் சார்ந்த பல தொழில்கள் நகர்ப்புறப் பெண்களின் தற்போதைய தேர்வாக இருக்கின்றன. இந்தத் தொழில்களில் வீட்டில் இருந்தபடி டிசைனிங் செய்துகொடுத்தாலே கைநிறைய சம்பாதிக்க முடியும்.
பெண்கள் சிறப்பாக சுயதொழில் செய்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில்தான் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அதைச் சரிசெய்ய சுயதொழில் தொடங்குதல், செயல்படுத்துதல், மார்க்கெட்டிங் செய்தல் போன்றவற்றுக்கான அடிப்படைப் பயிற்சிகளை அரசு வழங்கினால் சிறப்பாக இருக்கும். தவிர, கிராமப்புறப் பகுதிகளில் தயாரிக்கும் பொருள்களுக்கு, நகர்புறப் பகுதிகளில் எல்லாக் காலத்திலும் வரவேற்பு இருக்கிறது. எனவே, இவை இரண்டுக்குமான இடைவெளியைச் சரிசெய்யக் கண்காட்சி, சிறப்பு விற்பனை நிலையங்கள் போன்றவற்றை அரசு அதிகப்படுத்தினால் இன்னும் வளர்ச்சி அதிகரிக்கும்.
முன்பெல்லாம் தொழில் தொடங்கப் பணம் கிடைக்காமல் சிரமப்பட்ட பெண்கள், இன்று யாரையும் எதிர்பார்க்காமல் வங்கியை அணுகி எளிதாகக் கடன் பெறுகிறார்கள். தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து தொழில் தொடங்கும் பெண்களுக்கு வங்கிகள் பலவித வங்கிக் கடனுதவிகளை வழங்குகின்றன. ஆனால், அவை பற்றிய விவரங்கள் பெரும்பாலான பெண்களுக்குச் சென்று சேராமலேயே இருக்கின்றன. இதுதான் தொழில்முனைவோருக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரிய இடைவெளியாக இருக்கிறது.
பெண் தொழில் முனைவோர்களை வரவேற்கும் விதமாக பல வங்கிகளும் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, எங்கள் வங்கியில் சென்ட் கல்யாணி’ (பார்க்க பெட்டிச் செய்தி) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்என்றார் அவர்.
முன்பெல்லாம் பியூட்டி பார்லர், உணவு சார்ந்த தொழில்கள் போன்றவற்றைத் தொடங்கவே பெண்கள் ஆர்வம் செலுத்துவார்கள். ஆனால், இன்று டிசைனிங், உற்பத்தி, சர்வீசஸ் போன்ற பல புதிய தொழில்களில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இன்னுமுள்ள ஏராளமான புதிய தொழில்களில் கவனம் செலுத்தினால், தனித்துவத்துடன் எளிதாக வெற்றி பெறலாம்’’ என்றபடி, பெண் தொழில்முனைவோர்களுக்குப் பல பயனுள்ள தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை, அண்ணா நகர் கிளை முதன்மை மேலாளர் சந்தியா ரவிமோகன்.
‘‘புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் மாவட்டத் தொழில் மையத்தில் தங்களுக்குப் பிடித்தமான தொழில், அதற்கான வளர்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 
அருகிலுள்ள வங்கிகளிலோ அல்லது அந்த வங்கிகளின் இணையதளத்திலோ கடனுதவி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 
மேலும், எம்.எஸ்.எம்.இ (MSME - Ministry of Micro, Small & Medium Enterprises) மற்றும் கே.வி.கே (KVK - Krishi Vigyan Kendra) போன்ற அரசு நிறுவனங்களும் ஏராளமான தொழில் உதவிகளைச் செய்கின்றன.
மத்திய அரசின் முத்ரா, ஸ்டாண்ட்அப் இந்தியா போன்ற திட்டங்களில் பெண்கள்தான் அதிகளவில் பயன்பெறுகின்றனர். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான தொகையைப் புதிதாகத் தொழில் தொடங்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பெண் தொழில்முனைவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவியாக வழங்குகின்றன.
சுயதொழில் செய்யும் பெண்களுக்குக் கடனுதவி அளிக்க எங்கள் வங்கி உள்பட பல வங்கிகள் இன்முகத்துடன் காத்திருக்க, அதனைப் பற்றிய விழிப்பு உணர்வு பெண்களிடம் போய்ச் சேர வேண்டியது முக்கியம். அடுத்த 20 ஆண்டுகளில் தொழில் துறையில் ஆண்களுக்குக் கடும் சவால் கொடுக்கும் வகையில் பெண்கள் முன்னேறுவார்கள்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
வீட்டில் பெண்கள் முடங்கியிருந்த காலம் போய்விட்டது. இனி, தொழில் துறையிலும் அவர்கள் கலக்க வந்துவிட்டார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.
பெண்களுக்கான சில வங்கிக் கடன் திட்டங்கள்!
பெண் தொழில்முனைவோர்களுக்காகப் பல்வேறு வங்கிகள் சிறப்புத் திட்டங்கள், லோன் வசதி, வட்டி விகிதம் குறைப்பு, விசேஷக் கடன் என பல வசதிகளைச் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை இங்கே!
1. சென்ட் கல்யாணி திட்டம்
வங்கி: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா
தொழில்கள்: கைவினைத் தொழில்கள், உணவு சார்ந்த தொழில்கள், விவசாய மற்றும் கூட்டு நடவடிக்கைகள், சில்லறை வணிகம் மற்றும் அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: அதிகபட்சமாக ரூ.1 கோடி.
வட்டி விகிதம் குறைப்பு: ரூ.10 லட்சம் வரை 0.25%, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 0.50% (தொழில் மற்றும் நபர்களைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்).
வட்டி: ரூ.10 லட்சம் வரை, 8.95%. ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 9.40%

2. ஸ்ரீ சக்தி திட்டம்
வங்கி: ஸ்டேட் பேங்க்
தொழில்கள்: சிறு, குறு, நடுத்தர மற்றும் புதிய தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: ரூ.25 லட்சம்
வட்டி விகிதம் குறைப்பு: ஆண்களைவிட பெண்களுக்கு 0.5%. குறைவு வட்டி: 8.1%

3. தேனா சக்தி திட்டம்
வங்கி: தேனா வங்கி
தொழில்கள்: விவசாயம், உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைத் தொழில்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: தொழில் மற்றும் நபரைப் பொறுத்து மாறுபடும்.
வட்டி விகிதம் குறைப்பு: ஆண்களைவிட பெண்களுக்கு 0.25% குறைவு.
வட்டி: 11%

4. பி.என்.பி வனிதா திட்டம்
வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கி
தொழில்கள்: வருமானத்துக்கு வழிவகுக்கும் டிரேடிங், சர்வீஸ், தொழில் விரிவாக்கம், புதுப்பித்தல், உபகரணங்களை வாங்குதல்.
கடன் உச்சவரம்பு: ரூ.25,000.
வட்டி விகிதம்: 8.35%
(அடிப்படை வட்டி விகிதம்)

நன்றி : நாணயம் விகடன் - 30.07.2017

பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட்)

பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட்)
ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR (Community Service Register) எனப்படுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும்.
  • அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.  
  •  புகார் அளித்த நபருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும். 
  • ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 - (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.  
  • மேற்கண்டவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். 
  • அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது உத்தரவிட முடியும். இதனையே நாம் கோர்ட் டைரக்‌ஷன் என்கிறோம்.  
  • நீதிமன்ற உததரவுக்குப் பின், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157ன் கீழ் அந்த வழக்கை காவல்துறை அதிகாரி புலனாய்வு செய்து நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.  
  • இது போன்ற புலனாய்வு வழக்குகளில் இரண்டுக்கு மேலான குற்றங்கள் செய்யப்பட்டிருந்து, அவற்றில் ஏதேனும் ஒரு குற்றம் கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கானது குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 155(4)ன் கீழ் கைது செய்யப்படக்கூடிய வழக்காக (புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரி/அலுவலர்) எடுத்துக் கொள்ள வேண்டும்.  
  • அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.  
  • ஒருவேளை புலனாய்வு செய்வதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று விசாரணை அதிகாரிக்கு தோன்றினால், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(1)ஆ-ன் கீழ் அந்த வழக்கை அவர் புலனாய்வு செய்யக் கூடாது. இதனையே ”பிழை வழக்கு” (Mistake of Fact) என்கிறார்கள்.  
  • அதே நேரத்தில் ஒரு வழக்கை புலனாய்வு செய்வதாக இல்லை என்பதை குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(2)ன் கீழ், புகார் அளித்தவர்க்கு விசாரணை அதிகாரி உடனடியாக அறிவிக்க வேண்டும். 
  • காவல் நிலை ஆணை (POLICE STANDING ORDER) 660ன்படி ”பிழை வழக்கு” (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்ட பின், விசாரணை அதிகாரியானவர், புகார் அளித்தவர்க்கு (காவலர் படிவம் எண்:90ல்) வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை செய்ய வேண்டும். 
  • புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், அறிக்கை அனுப்ப வேண்டும். 
  • அதன் பிறகு நீங்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணை அதிகாரியால் பிழை வழக்கு (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்டுள்ளது, 
  • இது பற்றி ஏதேனும் கூற விரும்பினால். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் நீங்கள் முறையிடலாம்! என்று புகார் தந்தவர்க்கு நீதிமன்ற நடுவர் சம்மன் அனுப்புவார். 
  • உங்கள் வழக்கைப் பற்றி பொய்யான சாட்சியினை காவல்துறை அதிகாரி/அலுவலர் புனைந்தால், அது பற்றிய ஆதாரங்களோடு இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193ன்படி அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர் மீது நீதிமன்றத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். 
  • புகார் நிரூபிக்கப்பட்டால், அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்படும். 
  • உங்கள் வழக்கின் விசாரணை அறிக்கையில் எந்தக்கட்டத்திலும் அறிக்கை, கட்டளை, தீர்ப்பு அல்லது சட்டத்திற்கு முரணான எதையும் செய்திருந்தால், இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-219ன்படி அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர் மீது நீதிமன்றத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம்.
  • புகார் நிரூபிக்கப்பட்டால், அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்படும்.

*******************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Thursday, July 27, 2017

அண்ணா பல்கலைக் கழகம் - புதிய உத்தரவு

அண்ணா பல்கலைக் கழகம் - புதிய உத்தரவு
மூன்று வருடத்திற்குள் தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்
படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவை அறிவிக்க உள்ளது.
பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதாவது, 2011 ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தையும் பெறமுடியாது.
மேலும், கிரேட் சிஸ்டத்தில் 6.5 சதவிகிதம் எடுத்தால் முதல் வகுப்பு என முன்பு இருந்த நிலை இனி 7 சதவிகிதமாகவும், 8.5 சதவிகிதம் எடுத்தால் முதல் சிறப்பு வகுப்பு என்றும் மாற்றப்படவுள்ளது.
நன்றி : புதிய தலைமுறை 27.07.2017 இதழ்


சொந்த மாவட்டங்களில் போலீசார் பணிபுரிய தடை வழக்கு தள்ளுபடி

சொந்த மாவட்டங்களில் போலீசார் பணிபுரிய தடை வழக்கு தள்ளுபடி
மதுரை: போலீஸ் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற நடவடிக்கை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கன்னியாகுமரி சுலீப் தாக்கல் செய்த பொதுநல மனு: போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு விசாரணையை நியாயமாக நடத்தும் வகையில் தமிழக டி.ஜி.பி., 2001 செப்.,25 ல் சுற்றறிக்கை வெளியிட்டார். அதில், 'இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு உயர் பதவி வகிப்பவர்களை சொந்த மாவட்டங்களில் நியமனம்  செய்யக்கூடாது. குறிப்பிட்ட பகுதியில் பெரும்பான்மை சமூகத்தினர் இருந்தால், அந்த ஸ்டேஷனில் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.,யை நியமிக்கக்கூடாது,' என உள்ளது. இந்த வழிகாட்டுதல்களை சரியாக செயல்படுத்தவில்லை.
கன்னியாகுமரியில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கின்றன. புகாரை போலீசார் சரியாக விசாரிப்பதில்லை.
போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றம், நியமனம் தொடர்பாக டி.ஜி.பி.,யின் வழிகாட்டுதல் சுற்றறிக்கையை முழுமையாக செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, 'பொது ஊழியர் என்பவர், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2017

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
புதுடில்லி: மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி தொடர்ந்த அவதுாறு வழக்கில், உரிய பதில் அளிக்காத, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த்கெஜ்ரிவாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது மோசடியில் ஈடுபட்டதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டில்லி அரசின், ஐந்து அமைச்சர்களும், இதேபோன்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இவர்கள் மீது, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரி வால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, அருண் ஜெட்லி குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார்.
கெஜ்ரிவால் கூறியபடி, அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக, ராம்ஜெத் மலானி கோர்ட்டில் குறிப்பிட்டார். இதையடுத்து, கெஜ்ரிவால் மீது, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அருண் ஜெட்லி மற்றொரு அவதுாறு வழக்கை தொடர்ந்தார். இந்த மனுவுக்கு, கெஜ்ரிவால் தரப்பில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. 
இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், 'அவதுாறான வார்த்தைகளை பயன்படுத்தும்படி ராம்ஜெத் மலானியிடம் நான் எதுவும் கூறவில்லை' என, கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராம்ஜெத் மலானி, கெஜ்ரிவால்  சார்பில் இந்த வழக்கில் ஆஜராகப் போவதில்லை என அறிவித்துள்ளதுடன், இதுவரை, வழக்கில்  ஆஜரானதற்காக, 2 கோடி ரூபாய் கட்டணம் கேட்டும், 'பில்' அனுப்பி உள்ளார்.
அவதுாறாக பேசக்கூடாது : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதுாறு வழக்கு, டில்லி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நீதிபதி கூறியதாவது:வழக்கு தொடர்ந்துள்ள அருண் ஜெட்லியிடம் குறுக்கு விசாரணை நடத்தும் போது, அவதுாறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2017