ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பவர்கள், ஏ.டி.எம். கார்டு வழங்கிய வங்கியின் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதே நல்லது.
.ஒருவர் அ என்ற வங்கியில் (ஒரியண்டல் காமர்ஷஸ் வங்கி) கணக்கு வைத்திருந்து அந்த வங்கியில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட
ஏடிம் கார்டை கொண்டு “ஆ“ (ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானிர் மற்றும் ஜெய்புர்) என்ற வங்கிக்கான ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஏ.டி.எம். ஆனது ரூ.20,010 இருந்திருக்க வேண்டிய அவர் கணக்கில் ரூ.10 மட்டுமே இருப்பதாக காண்பிக்கின்றது.
.அவர் இது விஷயமாக தனது சேமிப்புக் கணக்கு உள்ள அ வங்கியிடம் புகார் அளிக்கின்றார். அ வங்கி ஆ வங்கியை தொடர்பு கொண்டதில், புகார்தாரர்
ஆ வங்கிக்கான ஏடிம்-ல் ரூ.20,000 பணம் எடுத்துள்ளார் என்று பதில் அளிக்கின்றது. அந்த பதிலில் திருப்தி அடையாத புகார்தாரர் ஆ வங்கி ஏ.டி.எம்.-ன் CCTV-ன் Footage கோருகின்றார். ஆனால், அதை ஆ வங்கி அவருக்கு கொடுக்க மறுக்கிறது, பாதிக்கப்பட்ட புகார்தாரர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். புகார்தாருக்கு
ஆ வங்கியானது ரூ.20,000 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் உத்திரவிடுகின்றது.
.அந்த உத்திரவுக்கு
எதிரகாக ஆ வங்கியானது மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திடம் எடுத்து செல்கின்றது. அதில், ஆ வங்கியானது, “புகார்தாரர் எங்களது ஏடிம் சென்டரில் உள்ள இரு மெஷின்களில் ஒவ்வொரு மெஷினிலும் ரூ.10000 என இரு முறை எடுத்துள்ளார்.”
என்று வாதாடுகின்றது
மேலும் புகார்தாரர்
எங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்ல. ஆகவே, எங்கள் வங்கிக்கும் புகார்தார்ருக்கு
இடையே Privity of Contract இல்லாததால், புகார்தாரர், எங்கள் வங்கியை பொறுத்துவரை நுகர்வோர் அல்ல என்பதால், எங்கள் வங்கி மீது புகார் அளிக்க அவருக்கு அதிகாரம் மற்றும் வரம்பு இல்லை என்று வாதாடுகின்றது. வங்கியின் கூற்று சரிதான் என்றும் புகார்தாரர் ஆ வங்கியின் நுகர்வோர் அல்ல என்றும் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும்
ஆணையம், மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின ஆணையை இரத்து செய்து உத்திரவிடுகின்றது.
.இந்த ஆணையை எதிர்த்து புகார்தாரர் மத்திய நுகர்வோர் ஆணையத்திற்கு வழக்கை சீராய்வுக்காக எடுத்து செல்கின்றார்.
அங்கு, மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகின்றது.
வழக்கின் முழுவிபரத்திற்கு லா ஜார்னல் II (2016) CPJ 613 (NC) பார்க்கவும்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்,
ஏடிம் கார்டு வழங்கியுள்ள வங்கியில் இருந்து பணம் எடுப்பதே சிறந்தது. மற்ற வங்கி ஏடிம்-ல் இருந்து பணம் எடுத்தால், மேற்கண்ட ஆணையின்படி இழப்பீடு மறுக்கப்படலாம்.
மேற்கண்ட வழக்கு பற்றி எனது (Leenus Leo Edwards) தனிப்பட்ட கருத்து
இந்த வழக்கு சரியான முறையில் நடத்தப்படவில்லை.
RBI அறிவுறுத்தலின்படிதான் மற்ற ஏடிம் மெஷின்களை நாம் உபயோகப்படுத்துகின்றோம். அனைத்து வங்கிகளுக்கு இடைய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த வங்கியின் ஏடிம் மெஷினை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளருக்கும் அந்த வங்கிக்கும் இடையே நேரடியாக வாடிக்கையாளர் என்ற தொடர்பு இல்லை என்றாலும், உட்கிடையான (Implied Privity of Contract) உள்ளது. ஆ வங்கியானது கடைசி வரை CCTV Footage வழங்கவில்லை. ஆகவே, ஆ வங்கிதான் முழுபொறுப்பேற்க
வேண்டும்.
பொதுவாக ஒரு வழக்கில் இரு வினாக்கள் எழும்.
ஒன்று Question of Fact (பொருண்மையை எழுவினா)
இரண்டாவது (Question of Law)
(சட்டத்தின்பால் எழுவினா).
இந்த வழக்கை பொறுத்தவரை, பணம் எடுக்கப்பட்டதா? என்பது பொருண்மையை பற்றிய எழுவினா ஆகும். ஆ வங்கிக்கும்
பணம் எடுத்தவருக்கும்
இடையே நுகர்வோர் என்ற உறவு இருக்கின்றதா
என்பது சட்டத்தின்பால்
எழுவினா ஆகும். எங்கெல்லாம் சட்டத்தின்பால் எழுவினா எழுகின்றதோ, அங்கெல்லாம் நாம் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம்.
நன்றி : திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ், வழக்கறிஞர்
No comments:
Post a Comment