பேராசிரியர் தகுதிக்கான ’செட்’ தேர்வு
சென்னை: பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது.
இதற்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்’ அல்லது தமிழக அளவிலான, ’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக ’செட்’ தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, தெரசா பல்கலையின், www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, செட் தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும்,2017 Dec. 18 ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கூடுதல் விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 15.12.2017
No comments:
Post a Comment