சென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?
காகிதமில்லாமல்,மொபைல் மூலம் புறநகர் ரயில் டிக்கெட் பெறும் அப்ளிகேஷனை ஏப்ரல் 22 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில் அறிமுகப்படுத்தினார் -
செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் ‘GOOGLE பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
அந்த செயலியில் மொபைல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், பாஸ்வேர்டு எண் கிடைக்கும்.
அதைத் தொடர்ந்து, டிக்கெட் புக்கிங் பகுதி தேர்வு செய்து, அதில் புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து, டிக்கெட்டை பெற முடியும்,
UTS WALLET க்கு பணம் மாறுதல்(money transfer) செய்து balance amount குறைந்த பட்சம் 50 அல்லது 100 ரூ வைத்து கொள்ள வேண்டும்
ரயில் நிலையத்தில் இருக்கும்போது அந்த ரயிலுக்கு நாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. ரயில்வே வழித்தடத்தில் இருந்து, 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால், 5 கி.மீ., தொலைவிற்குள், டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும்

இந்த அப்ளிகேசனை இதுவரை 70,000-க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். அம்பத்தூர் ,கும்மிடி பூண்டி ,வேளச்சேரி போன்ற ரயில் நிலையபகுதிகளுக்கும், பீச் முதல் தெற்கே கிண்டி உள்பட பெருங்களத்தூர் வரை இப்போது இந்த மொபைல் டிக்கெட் வசதி உள்ளது. ஊரப்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளுக்கு இந்த வசதி இப்போதைக்கு இல்லை
- ஷான்
நன்றி : விகடன் செய்திகள் 27.04.2015
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.