பி.எஃப் கணக்கு விபரங்கள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அறிந்துகொள்ளும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களைப் பெற, தங்கள் பொது கணக்கு எண்ணை (யு.எ.என் நம்பர்) www.uanmembers.epfoservices.in என்ற இணையதளத்துக்கு சென்று செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம்.
தகவல்களைப் பெறுவது எப்படி?: தங்கள் பொது கணக்கு எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த உறுப்பினர்கள், முந்தைய வருங்கால வைப்பு நிதி தொகையை நடப்பு கணக்குடன் இணைத்தல், வருங்கால வைப்பு நிதிக்கான மாத பங்களிப்புத் தொகை உள்ளிட்டவற்றை தாங்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசியில் இருந்து குறுந்தகவல் மூலம் அவரவர் தாய் மொழியில் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு குறுந்தகவல் மூலம் தமிழில் தகவல்களைப் பெற விரும்பும் உறுப்பினர்கள் EPFOHO UAN TAM என்றும், ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் EPFOHO UAN ENG என்றும் "டைப்' செய்து 7738299899 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என, வருங்கால வைப்புநிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணக்குகள் புதுப்பிப்பு: தாம்பரம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் 1-ஆம் தேதியே அனைத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என மண்டல வருங்கால ஆணையர் மூ.மதியழகன் தெரிவித்தார்.
வருங்கால வைப்பு நிதி கணக்குகள் இவ்வாறு ஒரே சமயத்தில் புதுப்பிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
தாம்பரம் மண்டலத்தில் மொத்தமுள்ள 24 லட்சத்து 52 ஆயிரம் உறுப்பினர்களின் கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டு, அதில் 11 லட்சம் உறுப்பினர்களின் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளவை என்றும், 12 லட்சத்து 52 ஆயிரம் கணக்குககள் செயல்பாட்டில் இல்லாததும் கண்டறியப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி - தினமணி நாளிதழ் 17.04.2015
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.