பத்திரப்பதிவு - கவனிக்க வேண்டியவை
நாம் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், முதலில் அந்த நிலம் அல்லது வீட்டின் மூலப்பத்திரம், பட்டா, சிட்டா போன்றவற்றை நன்றாக படித்து பார்க்க வேண்டும்.
பத்திரம் பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை என்ன?
முத்திரைதாள்களில் கிரயப்பத்திர
விவரங்களை டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும்
கீழ்ப்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும்.
சார்பதிவாளரிடம் இந்த கிரயப்பத்திரத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும். அவர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைபடம், அடையாள அட்டை ஆகியவற்றையும்
மற்ற விவரங்களையும்
சரிபார்த்து, பதிவு இலக்கம் அளிப்பார்.
பதிவுக்கட்டணம் செலுத்திய பின், முதல் முத்திரைத்தாளின்
பின்புறம் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின்
புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும்.
புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர்.
இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீதில், சார் பதிவாளரும், சொத்து வாங்குபவரும்
கையொப்பம் இட வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு, ரசீது காட்டி, சொத்து வாங்குபவர் பெற்றுக் கொள்ளலாம்.
வேறு யாரேனும் வாங்க வேண்டியிருப்பின், அந்த நபரும் ரசீதில் கையொப்பமிடவேண்டும்.நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்(சர்வே எண்) அமைந்திருக்கலாம்.
பத்திரம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவது?
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும்
இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) என்று பெயர். பத்திரப்பதிவின் போது இந்த மதிப்பீட்டில் 8 சதவீதத்துக்கு
முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.
சொத்து மதிப்பை நாம் நிர்ணயம் செய்யலாமா?
47-ஏ பிரிவு என்றால் என்ன?
அரசு நிர்ணயித்துள்ள
வழிகாட்டி மதிப்பு அதிகம். என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்து மதிப்பு நிர்ணயம் செய்து, அதில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள்
வாங்கலாம்.
சார்பதிவாளர் இப்பத்திரத்தை
பதிவு செய்து விட்டு பெண்டிங் டாக்குமென்ட் என முத்திரை இட்டுவிடுவார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஒரு பிரிவு இருக்கிறது. அங்குள்ள அலுவலர் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றியுள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து, வழிகாட்டி மதிப்பு சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார். வழிகாட்டி மதிப்பு சரியாகவே உள்ளது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அல்லது அவர் நிர்ணயித்த மதிப்புக்கும்
நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தில்
8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகே பதிவு செய்த பத்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இம்முறைக்கு 47 ஏ பிரிவு என்று பெயர்.
குறிப்பிட்ட காலத்துக்குள்
மீதித்தொகையை சார்பதிவாளர்
அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். இல்லையெனில், அது மாவட்டத்தின்
கலெக்டர் அலுவலகத்துக்கு
அனுப்பப்படும். அதன் பிறகு அங்கு சென்று வித்தியாசத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ள கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்.
41 படிவம் பற்றி தெரியுமா?
வழிகாட்டி மதிப்பின் 8 சதவீத அளவுக்கும் முத்திரைத்தாள்கள்
வாங்க முடியாத நிலை, அல்லது கிடைக்க வில்லை எனில் அதற்கும் வழி உண்டு.குறிப்பிட்ட அளவுக்கு முத்திரைத்தாள் வாங்கி, மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில்
செலுத்தலாம். இதற்கு 41 என்ற படிவம் உள்ளது.
வாங்க வேண்டிய முத்திரைத்தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்பத்திரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டியது ஆயிரம் ரூபாய் வரை எனில் பணமாகவே செலுத்தலாம்.
அதற்கு மேல் இருந்தால் வரைவேலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தவேண்டும்.
எந்த பெயரில் டி.டி எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த அலுவலக தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவுக்கட்டணமாகவும், ரூ. 100யை கணினி கட்டணமாகவும்
செலுத்த வேண்டும். இதையும் ரூ. 1000 வரை பணமாகவும், அதற்கு மேல் எனில் காசோலையாகவும் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment