குற்றப்பத்திரிக்கை என்றால் என்ன?
ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்யும் பிரிவு, (உதாரணமாக, காவல்துறை ) குற்றம் செய்தவர்களை பற்றி தயாரிக்கும் ஒரு ஆவணம்.
இது நீதிமன்றத்தில் சமர்பிக்கபடுகிறது. நீதிமன்றத்தில் இது சமர்பிக்கபட்டவுடன், யார் குற்றம் இழைத்தார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறதோ, அவர்கள் மேல், வழக்கை தொடர்ந்து நடத்த, உத்தரவிடும்.
முதல் தகவல் அறிக்கையின் (F.I.R) தொடர்ச்சியே, (CHARGE SHEET) குற்ற பத்திரிக்கை ஆகும்.
குற்ற பத்திரிக்கையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களை சேர்க்காமலும் விடலாம். ஆனால், சேர்க்காமல் விட்ட, காரணத்தை போலீஸ் சொல்ல வேண்டும்.
புகார் மனுதாருக்கு, காவல் துறை சரியாக விசாரிக்காமல், விட்டு விட்டதாக எண்ணம் இருந்தால், மீண்டும் விசாரிக்க சொல்லி, அதே வழக்கில், அதே நீதிமன்றத்தில் மனு செய்யலாம். அல்லது உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.
குற்றப்பத்திரிக்கையில் என்ன இருக்கும்?
குற்ற பத்திரிக்கையில் புகார் மனுதார், மற்றும் நடந்த சம்பவத்தை விவரிக்கும் சாட்சிகள் ஆகியோரின் வாக்கு மூலங்கள் இருக்கும். விசாரணை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி அனைவரது வாக்கு மூலங்களும் இருக்கும்.
புகார் மனு, முதல் தகவல் அறிக்கை, குற்ற பத்திரிக்கை ஆகியவற்றில் உள்ள முரண்களை வைத்தே, குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள்.
குற்றப்பத்திரிக்கை எத்தனை நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்?
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து, அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை
தாக்கல் செய்யத் தவறினால்
அப்படி செய்ய தவறினால், பிணை கிடைக்காத குற்றவாளிக்குக்கூட பிணை கிடைக்க கூடும்.
உரிய காலத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், புகார் மனுதார், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ, வழக்கு தொடுத்து, குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய சொல்லலாம்.
No comments:
Post a Comment