காவல்துறை எந்த ஒரு சூழ்நிலையில் ஒரு வழக்கை
பதிவு செய்ய வேண்டும்?
ஒரு குற்றமுறு செயல் நடந்திருக்கிறது என்று ஒருவர் புகார் செய்யும்போது, காவல்துறை, தேவைபட்டால், ஒரு அடிப்படை விசாரணை செய்து விட்டு, கீழ்கண்ட விஷயங்களில், முதல் தகவல் அறிக்கை கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும்,
என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பான, Lalita Kumari v. Govt. of U.P., (2014) 2 SCC 1. Date of decision: 12/11/2013, கூறுகிறது.
a. திருமண பிரச்சினைகள் அல்லது குடும்ப பிரச்சினைகள்
b. வணிகக் குற்றங்கள்
c. மருத்துவம் செய்வதில் கவனக்குறைவான விஷயங்கள்
d. லஞ்ச வழக்குகள்
e. கிரிமினல் குற்ற விசாரணையை ஆரம்பிப்பதில், அபரிமிதமான கால தாமதம் இருந்தால், (உதாரணமாக, ஒரு சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், அதை தெரிவிக்காமல் போனதற்கு), ஏற்க கூடிய விளக்கம் அளிக்காமல் போனால்.
f. மேலே சொன்னவை அனைத்தும் ஒரு உதாரணமே, ஆனால், ஒரு முதல் கட்ட விசாரணையை ஆரம்பிக்க இவை அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
g. புகார்தாரர் மற்றும் குற்றவாளியின் உரிமையை பாதிக்காதவாறு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், ஏழு நாட்களுக்கு மிகாமல், ஒரு முதல் கட்ட விசாரணையை உரிய காவல் அதிகாரி செய்ய வேண்டும். இதற்கான கால தாமதத்தை, பொது டைரியில், புலனாய்வு அதிகாரி எழுத வேண்டும்.
குற்ற வழக்கினை பதிய தவறினால்?
**************************
சட்டபடியான ஒரு கடமையை செய்ய ஒரு புலனாய்வு அதிகாரி தவறும்போது, அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 154 இன் படி வழக்கு பதிவு செய்ய தவறும்போது, , இந்திய தண்டனை சட்டம் பிரி வு 217 இன் படி, அது ஒரு குற்றம் ஆகும்,
“ஒருவரை சட்டபடியான தண்டனையிலிருந்து காப்பாற்றும் உட்கருத்துடன், அல்லது அதனால் அவரை அநேகமாக காப்பாற்ற கூடும், அல்லது அவர் ஆளாக கூடிய தண்டனைக்கும் குறைந்த தண்டனையை அடைய செய்ய கூடும்! என்று அறிந்து, அல்லது சொத்தை காப்பாற்றும் உட்கருத்துடன் அல்லது அதனால் சொத்து எதையும் தண்ட இழப்பிலிருந்தும் அல்லது சட்டப்படி அது உள்ளாக்கபட்டிருக்கும் பொறுப்பு எதனிலிருந்தும் தம்மால் அநேகமாக காப்பாற்றப்பட கூடும் என்று அறிந்திரிக்கின்ற ஒரு பொது ஊழியர் என்ற முறையில் அவர் நடந்து கொள்ள வேண்டிய வகைக்கான சட்டத்தின் உத்தரவு எதனையும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும்”
SC &ST (Prevention of Atrocities) Act, படி, ஒரு புகார் மீது ஒரு காவல் அதிகாரி வழக்கு பதிய செய்ய தவறினால், இந்த சட்டப்படி, அவரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாவார்.
குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் 2013 இல் ஏற்பட்ட amendment படி, புலனாய்வு அதிகாரி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166-A இன் படியும் தண்டிக்கப்பட கூடியவர் ஆகிறார். “
166A. ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு, சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாதிருக்கின்ற பொது ஊழியர்—
ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமலிருப்பதால், எவருக்கேனும் கேடு விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அநேகமாக கேடு விளைவிக்கக்கூடும் என்ற அறிவுடன் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறைக்கான சட்டத்தின் ஆணை எதற்கும் அறிந்தே கீழ்படியாமலிருந்தால்,
(d) knowingly disobeys any direction of the law which prohibits him from requiring the attendance at any place of any person for the purpose of investigation into an offence or any other
(e) knowingly disobeys, to the prejudice of any person, any other direction of the law regulating the manner in which he shall conduct such investigation, or
அல்லது
(f) ஒரு குற்றமுறு செயல் நடந்து, அது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 326A, 326B, 354, 354B, 370, 370A, 376, 376A, 376B, 376C, 376D, 376E அல்லது 509 படி தண்டிக்ககூடிய குற்றமாக இருந்து, அதை பற்றி தகவல் கிடைத்தும், குற்றவியல் விசாரணை முறை சட்டம், 1973, பிரிவு, 154(1) இன் படி, அதை புலனாய்வு அதிகாரி பதிவு செய்ய தவறினால், எவராக இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு குறையாமல், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனையும், அதனுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படலாம்.
மேலும் இது கைது செய்தற்குரிய (cognizable) குற்றமாகும்.
(f) fails to record any information given to him under sub-section (1) of section 154 of the Code of Criminal Procedure, 1973, in relation to cognizable offence punishable under section 326A, section 326B, section 354, section 354B, section 370, section 370A, section 376, section 376A, section 376B, section 376C, section 376D, section 376E or section 509 of Indian Penal Code,
shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years, and shall also be liable to fine and it is a cognizable offence.
இது தவிர, குற்றமுறு செய்கையை ஒரு புகாரானது விவரித்தும், ஒரு புலானாய்வு அதிகாரி, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தவறினால், துறைரீதியான விசாரணைக்கும் அவர் ஆட்படுத்தபடுவார்.
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.