உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட
வழக்குகளின் நிலையை அறிவது எப்படி?
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை, வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கீழ் நீதிமன்ற (Lower court) நீதிபதிகள் ஆகியோர் தெரிந்து கொள்ளும் வகையில் இத்தகவல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றின் மூலம், வழக்குகள் குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
• தலைப்பு வாரியாக (வாதி/பிரதிவாதியின் பெயர்) (Title wise (Petitioner or Respondent’s Name))
• வழக்கறிஞரின் பெயர் வாரியாக (Advocate’s Name wise)
• உயர்நீதிமன்ற வழக்கு எண் வாரியாக (High Court Number wise)
• நாட்குறிப்பு எண் வாரியாக (Diary Number wise etc.)
1. வழக்கின் நிலையை CASE STATUS PORTAL OF SUPREME COURT OF INDIA (http://
2. வழக்கின் நிலையை பின்வரும் வழியின் மூலம் நீங்கள் அறியலாம்.
• மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் இடது பக்கத்தில் இருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து வழக்கின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கு எண் வாரியாக (Case Number wise)
• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) வழக்கின் வகையைத் தேர்வு செய்ய வேண்டும்..
• வழக்கின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்..
தலைப்பு (வாதி/பிரதிவாதியின் பெயர்) வாரியாக.
(Title (Petitioner or Respondent’s Name) wise)
• வாதி அல்லது பிரதிவாதியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்
• தெரியாது (Don’t Know)
• மனுதாரர் (Petitioner) அல்லது
• பிரதிவாதி (Respondent)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்..
வழக்கறிஞர் பெயர் வாரியாக (Advocate’s Name wise)
• வழக்கறிஞரின் பெயரைப்பதிவு செய்யவேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவேண்டும்..
உயர்நீதிமன்ற எண் வாரியாக (High Court Number wise)
• உங்கள் மாநிலத்தை கீழிறங்குப்பெட்டியில் இருந்து (drop down box) தேர்ந்தெடுக்க வேண்டும்..
• கீழ் நீதிமன்ற எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• தீர்ப்பு தேதியைக் கீழிறங்குப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும்..
நாட்குறிப்பு வாரியாக (Diary Number wise)
• நாள் குறிப்பு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment