ஃபேஸ்புக்கில் வக்கிரமான பக்கங்களைப் பார்த்தால் ............?
********************************************************************
ஃபேஸ்புக் என்பது ஒரு அருமையான ஊடகம் ஆகும். அதில் பொதுமக்களுக்கு பயன்படும் பல செய்திகள், படங்கள், வீடியோக்கள் பலராலும் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் உலா வருகிறது. இதனால் பலரும் பயன்பெறுகின்றனர்.
ஆனால், இதனை வக்கிர எண்ணம் கொண்ட சிலர், தங்களது வக்கிரத்தை வெளிப்படுத்தும் களமாக, ஆபாசங்களை பரப்புகின்ற தளமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட பக்கங்களை போகிற போக்கில் நீங்களும் பார்த்திருக்கலாம். அது உங்களை அறுவெறுப்படைய வைத்திருக்கலாம். உங்கள் நெஞ்சத்தில் அது கொதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு நிமிடம் உங்களை யோசிக்கவும் வைத்திருக்கலாம்.
உங்களைப் போன்றவர்களுக்குத்தான் இந்தப்பதிவு. உங்கள் பெயரையோ, முகவரியையோ நீங்கள் வெளிப்படுத்த வேண்டியதில்லை. நம்மைப் பற்றி புகார் செய்தவர் யார் என்று அந்த வக்கிரபுத்தி கொண்டவருக்கு தெரியப்போவதே இல்லை. ஃபேஸ்புக்கில் இதற்கு நமக்கு அந்த வசதியை செய்து தந்திருக்கிறார்கள்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஆட்சேபிக்க வேண்டிய ஃபேஸ்புக் பக்கத்தின் வலதுபுறத்தில் Message
என்ற Option-க்கு அருகில் மூன்று புள்ளிகள் (...) தொடர்ச்சியாகத் தெரியும். அதனை Click செய்தால் Report மற்றும் Block என்னும் இரு தேர்வுகளைக் காட்டும்.
அதில் Report என்பதை Click செய்தால் , என்ன மாதிரியான பதிவு அந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பது குறித்து தங்களிடம் கேட்கப்படும். அதனை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் புகாரானது பதிவு செய்யப்படும். தங்களைப் போல, அந்த குறிப்பிட்ட பக்கத்தை 20 பேருக்கு மேல் புகார் செய்தால், அந்தப் பக்கத்தை ஃபேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நீக்கிவிடும்.
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.