ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
***********************************************************************
அரசு சார்ந்த பல சேவைகள் ஆன்லைனில் கிடைக்க துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகின்றது. இண்டர்நெட் மூலம் அரசு ஆவணங்களை பூர்த்தி செய்வது மிகவும் எளிமையான நடைமுறையாகிவிட்டது. அந்த வகையில் ஆன்லை் மூலம் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இணையத்தில் பாஸ்போர்ட் பெற செய்ய வேண்டியவைகளை பாருங்கள்..
இணையதளம்:
முதலில் பாஸ்போர்ட் சேவா (Passport seva) இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ரெஜிஸ்டர்:
பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்தும் முன் அதில் உங்களை பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும்.
லாக் இன்:
ரெஜிஸ்டர் செய்த பின் மீண்டும் பாஸ்போர்ட் சேவா தளத்திற்கு சென்று (Log in) லாக் இன் செய்ய வேண்டும்.
அப்ளை:
லாக் இன் செய்ததும் "Apply for Fresh Passport / Re-issue of Passport" க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்தவுடன் புதிய பக்கத்தில் விண்ணப்ப படிவம் காணப்படும்.
விண்ணப்பம்:
விண்ணப்பம்:
இங்கு காணப்படும் விண்ணப்ப (Application) படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த பின் சமர்பிக்கலாம்.
பணம்:
விண்ணப்ப படிவத்தை சமர்பித்த பின் "Pay and Schedule Appointment" க்ளிக் செய்ய வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்றவைகளை பயன்படுத்தலாம். பணம் செலுத்திய பின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேதியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ப்ரிண்ட்:
பணம் செலுத்தி முடித்த பின் "Print Application Receipt" க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.
பாஸ்போர்ட்:
விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்த பின் தேர்வு செய்த தேதியில் வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு செல்லும் போது அனைத்து படிவங்களின் ஒரிஜினல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
வாழ்த்துக்கள்! .
நன்றி: TAMIL GIZBOT
பாஸ்போர்ட் பெறுவதில் தாமதமா?- உரிய காரணத்தை தொலைபேசியில் தெரிவிக்கும் புதிய நடைமுறை அறிமுகம்: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்
பாஸ்போர்ட் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்து வம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடு செல்கின்றர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களிடம் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விண்ணப் பிக்கும்போது ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட் டால் அதுகுறித்த காரணத்தை சம்மந்தப்பட்ட விண்ணப்ப தாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப் பிப்பவர்களில் நாள்தோறும் 2 ஆயிரத்து 550 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர். அல்லது விண்ணப்பத்தைத் தவறாக பூர்த்தி செய்கின்றனர்.
மேலும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட்டை உரிய நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு சரியான தகவல் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்களை தொடர்புகொண்டு அவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் என்ன காரணத்துக்காக தாமதமாகிறது என்ற காரணத்தைத் தெரிவிப்பார். மேலும் எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் தயார் செய்து வழங்கப்படும் என்ற விவரத்தையும் கூறுவார்.
இதன் மூலம், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேவையின்றி எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 18002581800, 28513640, 28518848, 28513639, 28513641, 28513575 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
நன்றி தி இந்து நாளிதழ் - 01.06.2015
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களை போன்ற இளம் வழக்கறிஞர்களுக்கு பேருதவியாக இத்தளம் அமைந்துள்ளது. மேலும் இப்பொதுச்சேவை சாதாரண மக்களும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்மை அளிக்கிறது. மேலும் இச்சேவை வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
ReplyDelete