disalbe Right click

Thursday, June 4, 2015

காண்டாக்ட்லெஸ் டெபிட்கார்டு


காண்டாக்ட்லெஸ் டெபிட்கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?

சென்னை: வங்கிகள் மேலும் மேலும் இந்த புதிய தொடர்பில்லா டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை நாடத் தொடங்கியுள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கிகளைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியும் இத்தகைய கார்டுகளை வெளியிட்டுள்ளன. 

இவற்றில் ஸ்வைப் மெஷினில் தொடர்பு ஏற்படுத்தத் தேவையில்லாத முத்திரை இந்த கார்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பது மிகவும் எளிது என்பதுடன், நீங்கள் உங்கள் பின் நம்பரை உபயோகப்படுத்த வேண்டியதில்லை.

 இது போன்ற கார்டுகள் என்எஃப்சி, அதாவது நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) எனப்படும் விரைவான பரிமாற்றத்திற்கு உதவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. 

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது? 
**************************************
இந்த கார்டுகளில் உள்ள தொடர்பில்லா முத்திரை அலைவரிசைகளின் மூலம் ஸ்வைப் மெஷின் அருகில் எடுத்து செல்லும்போது அதிலுள்ள பச்சை விளக்கு எறிந்து பரிவர்த்தனை முடிவுற்றதைத் தெரிவிக்கும். இவற்றை சாதாரண விசா டெபிட் கார்டுகளைப் போல அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் பின் நம்பரை உபயோகித்துச் செய்யவும் முடியும்.

 இந்த புதிய வசதி உடைய கடைகள் அல்லது விற்பனைக் கூடங்களில் இந்த வகைக் கார்டுகளை பயன்படுத்தலாம். வங்கிகள் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கும். இது போன்ற பரிவர்த்தனைகளையும் அதன் வரம்புகளையும் அங்கீகரிக்கும் உரிமை அவற்றை வழங்கும் வங்கிகளைச் சார்ந்திருக்கும். 

ஒரு நாளைக்கு, வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு இது போன்ற சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகள் எத்தனை செய்ய இயலும் என்பதை வங்கிகளே தீர்மானிக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் வாடிக்கையாளர்கள் இந்த பின் உபயோகம் இல்லாத பரிவர்த்தனைகள் என்பது இதுபோன்ற வசதியுள்ள வர்த்தக் கூடங்களில் ரூபாய் 2000 வரை உச்ச வரம்பு கொண்டவை.

 கார்டு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றி புகார் அளிக்க இணையத்தின் மூலமோ, தொலைபேசியிலோ அல்லது எஸ் எம் எஸ் அல்லது ஐவிஆர்எஸ் மூலமோ உடனடியாக தெரிவித்துவிட வேண்டும்.

நன்றி :குட்ரிட்டன்ஸ் - 05.06.2015

No comments:

Post a Comment