உயில் - என்ன செய்ய வேண்டும்?
இந்திய வாரிசுரிமை சட்டம் 1925 சட்டப்பிரிவு 59ன்படி
உயில் என்பது ஒருவர் தம் இறப்பிற்கு / மறைவிற்கு பின் தனது சொத்துக்களை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை சட்டப்படி தெரிவிக்கும் ஒரு ஆவணம் ஆகும்.
மைனர் மற்றும் சித்த சுவாதீனம் சரியில்லாத நபர்களை தவிர யூத் /இளைஞர்கள் முதல் கொண்டு வயதான முதியவர்கள் வரை உயில் யார் வேண்டுமானாலும் எழுதலாம்,

அவர் செவிடாக இருந்தாலும் சரி ,ஊமையாக இருந்தாலும் சரி,அவர் குருடாக இருந்தாலும் சரி, தாம் செய்வது என்னவென்று அறிந்த செய்பவர்கள் அனைவருக்கும் உயில் எழுத உரிமை உண்டு.
இந்திய வாரிசுரிமை சட்டம் 1925 சட்டப்பிரிவு 62ன்படி
உயில் எழுதி வைக்க உரிமையுடைவர் எவரும் ,தான் எழுதி வைத்த உயிலை எந்த காலத்திலும் அதனை மாற்றி எழுதவும் அல்லது ரத்து செய்யவும் உரிமை உடையவர் ஆவார்.
உயில் எழுதி வைக்க உரிமையுடைவர் எவரும் ,தான் எழுதி வைத்த உயிலை எந்த காலத்திலும் அதனை மாற்றி எழுதவும் அல்லது ரத்து செய்யவும் உரிமை உடையவர் ஆவார்.
இந்திய வாரிசுரிமை சட்டப்பிரிவு 105 ன்படி
உயில் மூலம் சொத்தை அடையவேண்டியவர் உயில் எழுதி கொடுத்தவருக்கு முன்பே இறந்துவிட்டால், அவருக்கு கொடுத்தது ரத்தாகும்.மீதி சொத்தை அடைய வேண்டியவர் எவராவது இருந்தால்,அவருக்கே இந்த சொத்துக்களும் சென்றடையும்.
உயில் மூலம் சொத்தை அடையவேண்டியவர் உயில் எழுதி கொடுத்தவருக்கு முன்பே இறந்துவிட்டால், அவருக்கு கொடுத்தது ரத்தாகும்.மீதி சொத்தை அடைய வேண்டியவர் எவராவது இருந்தால்,அவருக்கே இந்த சொத்துக்களும் சென்றடையும்.
ஆனால்.அவ்வாறு இறக்க நேர்ந்தால்,அச்சொத்துக்கள் வேறு ஒரு நபரை சென்றடையும் என்று உயில் எழுதி வைத்தவரே குறிப்பிடலாம்.
உயில் மூலம் சொத்தை அடைய வேண்டியவர் இறந்த போய் அவருடைய வாரிசுகள் அந்த சொத்துக்களில் பாத்தியம் கொண்டாடினால் ,உயில் எழுதி வைத்தவர் இறந்த போது உயில்படி சொத்தை அடைய வேண்டியவர் இறந்ததை வாரிசுகள் மெய்ப்பித்தால் தான் அந்த சொத்தை அடையமுடியும்.
இந்திய வாரிசுரிமை சட்டப்பிரிவு 104 ன்படி
ஒருவர் உயில் மூலம் அடையவிருக்கும் சொத்தை அதை பெறுவதற்கு முன் இறந்துவிடும் போது, அந்த சொத்துகள் அவரது வாரிசுகளை சென்றடையும்.
உதாரணத்திற்கு :
கோவிந்தராஜ் என்பவர் சுப்பிரமணிய பெருமாளுக்கு தனது சொத்துக்களை உயில் எழுதுகிறார். அந்த உயிலில் எப்பொழுது அந்த சொத்து சுப்பிரமணிய பெருமாளுக்கு அடைய வேண்டும் என்று எழுதியவர் குறிப்பிடப்படவில்லை என்றால்,இத்தகைய நிலையில் உயில் எழுதியவர் இறந்த தேதியிலேயே உயில்படி சொத்தை அடைய வேண்டியவருக்கு அச்சொத்தில் பாத்தியம் ஏற்ப்பட்டுவிடுகிறது. அதை பெறும் சுப்பிரமணிய பெறுமாளும் இறந்துவிட்டால் ,அந்த சொத்துக்கள் அனைத்து சுப்பிரமணிய பெருமாளின் வாரிசுகளுக்கு சென்றடையும்.

உயிலில் குறைந்தது இரண்டு நபர்கள் சாட்சி கையொப்பம் அளிக்க வேண்டும்.யாரேனும் ஒருவர் மட்டும் கையொப்பம் இட்டு இருந்த உயிலோ அல்லது சாட்சிகள் கையொப்பம் இல்லாத உயில்கள் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.
இரண்டு சாட்சிகளும் உயில் எழுதுபவர் கையொப்பம் இடுமோது அருகில் இருந்து அவர்களும் சாட்சி கையொப்பம் இட வேண்டும் என அவசியமில்லை. சாட்சி கையொப்பம் இடுபவர்கள், அந்த ஆவணத்தை எழுதியவர் கையொப்பம் இட்டதை உறுதி செய்து கையொப்பம் இட்டால் போதும்.
முக்கியமான நிபந்தனை என்னவென்றால், எவருக்கு உயிலில் சொத்துரிமை சேர்வதாக எழுதப்பட்டிருக்கின்றதோ, அவர் அந்த உயிலில் சாட்சியாக கையொப்பம் இடக்கூடாது.
இவர்களுக்கு பொருந்தாது
மேற்கண்ட விதிமுறைகள் இராணுவ வீரர்கள், போர்களத்தில் உள்ள வீரர்கள்,கப்பல் படை வீரர்கள், விமான படை வீரர்கள் ஆகியோர்களுக்கு பொருந்தாது.
இவர்களது உயில்கள் வாய் மொழியாகவும் வகுக்கப்படலாம் அல்லது எழுத்து மூலமாகவும் எழுதிக் கொள்ளலாம்.இவற்றில் சாட்சிகள் கையொப்பம் இட அவசியம் இல்லை. உயில்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை

உயில் வலுவான ஆவணமா?
உயில் என்பது மிக வலுவான ஆவணம் அல்ல.
குறிப்பாக 80 வயதுக்கு மேல் எழுதும் உயில்கள் “தகாத செல்வாக்குடன்“ எழுதப்பட்டது என அதன் உறுதிதன்மையை கேள்வியாக்கலாம்.
அவ்வாறு கேள்வியாக்கினால், உயிலினால் யார் பயன் பெறுகின்றாரே அவர்தான் அதை நிருபிக்க வேண்டும். இது உயிலுக்கு மட்டுமல்ல, தான செட்டில்மென்ட்டுக்கும் பொருந்தும்.
80 வயதுக்கு மேல் ஒருவரிடம் இருந்து சொத்து எழுதி வாங்குபவர்கள் ஏதாகிலும் விலைக்கு வாங்குவதுதான் சரியானதாக அமையும்.
ஒருவர் 4 உயில்கள் எழுதியிள்ளார் கடந்த 10 வருடங்களில் பின்னர் அந்த உயிலில்களில் இல்லாத உறவினருக்கு தான செட்டில்மென்ட் பண்ணுகின்றார். இப்போது, அந்த தான செட்டில்மென்ட் தகாத செல்வாக்கினால் பெறப்பட்டதாகவே நீதிமன்றம் நம்பும். அவ்வாறு இல்லை என்று நிருபிக்க வேண்டிய பொறுப்பு தான செட்டில்மெண்ட் பெற்றவரின் கடமை.
உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு (இந்து) ஆண் இறக்கும் போது......
இந்து ஆண் ஒருவர் எவ்வித உயிலும் எழுதி வைக்காமல் இறந்திருக்கும் போது ,முதலில்
வாரிசு முதல் நிலை ஆகியவர்கள் சொத்த அடைவார்கள் .
அவர்களின் வரிசையை இவ்வாறு கணிக்கலாம்.,
வாரிசு முதல் நிலை ஆகியவர்கள் சொத்த அடைவார்கள் .
அவர்களின் வரிசையை இவ்வாறு கணிக்கலாம்.,
இறந்த நபரின்
மகன் ,மகள்,மனைவி,தாய்,
முன்னதாக இறந்துபோன மகனின் மகன்(மகன் வயிற்று பேரன்)
முன்னதாக இறந்து போன மகனின் மகள்(மகன் வயிற்று பேத்தி)
முன்னதாக இறந்து போன மகளின் மகன்(மகள் வயிற்று பேரன்)
முன்னதாக இறந்துபோன மகளின் மகள் (மகள் வயிற்று பேத்தி)
முன்னதாக இறந்துபோன மகனின் விதவை மனைவி,
முன்னதாக இறந்துபோன மகனின் பேரன்
முன்னதாக இறந்துபோன மகனின் பேத்தி
முன்னதாக இறந்துபோன மகனின் பேரன் மனைவி
ஆகியவர்கள் முதல் நிலை வகுப்பு வாரிசுகள் ஆவார்கள்.
இவர்கள் யாரும் உயிருடன் இல்லாத போது அடுத்தடுத்து வாரிசுகளான CLASS-II வில் உள்ள வாரிசுகள் சொத்தில் உரிமை அடைவார்கள்.
உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு (இந்து) பெண் இறக்கும் போது......
இந்து பெண் ஒருவர் தமது சொத்துக்கள் குறித்து உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில் இறந்துபோனால்,அவரது சொத்துக்கள் பின்வரும் நபர்கள் வாரிசுகளாக இருந்து அடைவார்கள்.
1-முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்களும்,மகள்களும்,கணவனும் அடைவார்கள்.
2-இரண்டாவதாக இறந்த பெண்ணின் கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
3-மூன்றாவதாக இறந்த பெண்ணின் தாய்,தந்தை அடைவார்கள்.
4-நான்காவதாக இறந்த பெண்ணின் தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்.
5-இறுதியாக இறந்த பெண்ணின் தாயின் வாரிசுகள் அடைவார்கள்.
இந்த ஐந்து பிரிவிலும் ஒவ்வொரு பிரிவிலும் யாரும் உயிருடன் இல்லாத போது மட்டுமே அடுத்தடுத்த பிரிவிலுள்ள வாரிசுகள் சொத்தை அடைய முடியும்.
முக்கியமாக ஒன்று வாரிசுகள் சமமாகவே சொத்தை பங்கிட்டு கொள்வார்கள்.
நன்றி : வழக்கறிஞர்கள் திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ்
& திரு T S Arunkumar
& திரு T S Arunkumar
No comments:
Post a Comment