பிடிக்கப்படும் பி.எஃப். தொகையை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
சென்னை: நாம் ஒவ்வொருவரும் மாதம் தவறமல் விரும்பியோ அல்லது விரும்பமலோ சேமநல நிதிக்காக (provident fund) மாதமாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை நாம் பணிபுரியும் நிறுவனத்தில் செலுத்தி வருகிறோம்.
இது நாம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது நம் கணக்கை புதிய நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இப்போது உள்ளது. சரி, இந்த சேமநல நிதி எப்படி கணக்கிடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..??
சேமநல நிதி ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் (Basic Pay) 12 சதவீதத்தை நிறுவனவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பழைய முறை. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் சம்பளம் மற்றும் கிராக்கிப்படி எனப்படும் DAவும் இணைந்து 12 சதவீதம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக,
ஸ்ரீநிவாஸ் என்னும் நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் இவரின் அடிப்படை சம்பளம் (Basic Pay) மாதம் 30,000 ரூபாய், போக்குவரத்து படியாக 5,000 ரூபாய் மற்றும் மருத்துவ படியாக 5,000 ரூபாய். இவரின் சேமநல நிதி எவ்வளவு என்பதை இப்போது பார்போம்.
பழைய முறை
பழைய முறைப்படி ஸ்ரீநிவாஸின் மாத வருமானத்தில் சேமநல நிதி 30,000 ரூபாய்க்கு மட்டுமே கணக்கிடப்படும், ஆதாவது அவரின் அடிப்படை சம்பளத்தில் (Basic Pay) மட்டுமே கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 3,600 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
இபிஎஃப் = 30,000*12/100= 3,600 ரூபாய்
புதிய முறை
புதிய முறைப்படி ஸ்ரீநிவாஸின் மாத வருமானத்தில் சேமநல நிதி போக்குவரத்து படி மற்றும் மருத்துவ படியையும் சேர்த்து 40,000 ரூபாய்க்கு கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 4,800 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
இபிஎஃப் = 40,000*12/100= 4,800 ரூபாய்
நன்றி :
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 11.04.2016
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 11.04.2016
No comments:
Post a Comment