disalbe Right click

Friday, April 29, 2016

முத்ரா கடன் பெற


முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

முத்ரா கடன் திட்டம்
இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு 
ரூ.10,00,000/- வரை (பத்து லட்சம்) சொத்து பணயம் இல்லாத வங்கி கடன் பெறும் திட்டம் ஆகும்.
Image result for mudra bank
சிறு தொழில்களுக்கு நமது நாட்டில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள்,வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, மத்திய அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
வங்கிக்கடன் கிடைக்காததால்  சிறுதொழில் செய்பவர்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின்றனர். அங்கு,அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை என்பதை அறிந்த மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ‘முத்ரா’ வங்கி திட்டத்தை  அறிவித்தது.
இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 08.04.2015 தேதி முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார். நாடு முழுவதிலும் முத்ரா வங்கி அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளன.
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்கள் சொத்து பணயம் இல்லாமல் கடன் பெறுகின்ற திட்டம். இது தனிநபர் கடன் திட்டம் அல்ல. தொழில் நடத்துவதற்கு வழங்கப்படும் தொழில் கடன் திட்டம்.

முத்ரா கடன் திட்டம் பற்றிய முழு விபரம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (Micro Small Medium Enterprises) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri Mudra Yojana) . இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. 

முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது மத்திய அரசின் ஒரு திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இதனை மத்திய நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குருந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.
இத்திட்டத்தின்சேவைகள்:
குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் இந்த முத்ரா யோஜனா திட்டம் சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய மூன்று வகைகளில் கடன்களை வழங்குகிறது.
சிசு (SHISHU) 

இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) 

இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) 

இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

எதன் மூலம் வழங்கப்படுகிறது? 
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.
இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?
  •  அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  •  உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிவு படுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவனை கலைஞர் உற்பத்தி, தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
  •  பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை கோழிப்பண்ணை, வீவசாயம், காலன் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது
  •  ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவு படுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடன் பணமாக கிடைக்குமா?
  •  கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல்( Quatation) கொடுக்க வேண்டும்.அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும்
  •  உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் உரிய ஆவணங்களின் மூலம்  நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.
எதற்கெல்லாம் இதன் மூலம் கடன் கிடைக்காது?
  •  சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.
  •  கல்வி கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகன கடன் இதில் வராது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற என்ன செய்ய வேண்டும்?.
  •  இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
  •  கண்டிப்பாக 18 வயது முடிந்திருக்க வேண்டும்
  • இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதனை, வங்கியின் மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.
  •  இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.
  •  இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கப்படும்.
  •  நீங்கள் வாங்கும் கடனை அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.
  •  நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.
ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கப்படுமா?
  •  ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.
  •  இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் ( SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. 
  • கடன் அதிகபட்சமாக பத்து லட்சம் வரை பெறலாம்.
  •  ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.
  •  உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
  •  அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். இருந்த போதிலும், உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.
  •  விலைப் பட்டியலுக்கான Quotation-னுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.
  •  இந்த கடன் திட்டத்திற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் ஏதும் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் இந்தக் கடனை வழங்கும்.

கடன் வழங்கும் வங்கிகள்: 

* 27 Public Sector Banks
• 17 Private Sector Banks
• 31 Regional Rural Banks (RRBs)
• 04 Co-operative Banks
• 36 Micro Finance Institutions (MFIs)
• 25 Non Banking Financial Companies (NBFCs)

விண்ணப்பத்தில் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?
1) அடையாள சான்று ( வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்) 
2) இருப்பிட சான்று (நடப்பு மாதத்தில் கட்டிய தொலைபேசி ரசீது, அல்லது மின்சார கட்டண ரசீது அல்லது வீட்டு வரி ரசீது) 
3) சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
4) இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான விலைப்பட்டியல் ரசீது Quotation 
5) சப்ளையர் விபரங்கள் 
6) தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் அதன் உரிமம் 
7) ஓ.பி.சி. சாதிச் சான்றிதழ் 
மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை தங்களிடம் கேட்பதற்கு வாய்ப்புண்டு.
முத்ரா அட்டை:
இத்திட்டம் மூலம் கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000வரை 
பயன்படுத்தலாம்.
கடன் வழங்குவதற்கு மறுத்தால்....
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன் மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.. உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.
முக்கிய குறிப்பு:
  1.  வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் சென்று பார்க்கவும் மாலை 4.00 மணிக்கு மேல் அனுமதி பெற்று பார்த்தல் நல்லது
  2.  மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நல்லது. நீங்கள் வேண்டுகின்ற கடன் தேவைக்கு சரியான விளக்கத்தை அவரிடம் தருவதற்கு தயாராக செல்லுங்கள்.
  3.  மேலாளரின் முடிவே இறுதியானது.
  4.  மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும்.

நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.
No automatic alt text available.

1 comment:

  1. உங்களுக்கு கடன் தேவையா? ஆம் எனில் எங்களை தொடர்பு கொள்ளவும்: மேலும் தகவலுக்கு offer0148@gmail.com. கீழே உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டுமா?

    முதல் பெயர்:
    கடைசி பெயர்:
    குடியுரிமை:
    வயது:
    மாத வருமானம்:
    கடன் தேவையான தொகை:
    கடன் காலம்:
    லேண்ட்லைன் எண்கள்:
    மொபைல் எண்கள்:

    வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete