disalbe Right click

Thursday, April 7, 2016

சொத்து பதிவுகள்


சொத்து பதிவுகள் - என்ன செய்ய வேண்டும்?

சொத்தை பத்திரப்பதிவு செய்ய என்ன செய்வது?

சொத்தின் உண்மையான உரிமையாளரிடமிருந்து, அந்த சொத்தை உரிமை மாற்றம் செய்து தரும் நடவடிக்கைதான் பத்திரப்பதிவு. சொத்தின் மூல ஆவணங்கள் அடிப்படையில் இந்த உரிமை மாற்றம் செய்யப்பட வேண்டும். முக்கியமாக சொத்தின் தாய்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல் விவரங்கள், வில்லங்கச் சான்று மற்றும் இதற்கு முன் அந்த சொத்து உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்த விவரங்களின் அடிப்படையில், தற்போது அந்த சொத்தை விற்பவர் வாங்குபவர் புகைப் படங்களுடன் முத்திரை தாளில் பதிவு செய்ய வேண்டும்.

சொத்தின் வழிகாட்டி மதிப்பில் ஏழு சதவிகித தொகைக்கு முத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனுடன் வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவிகித தொகையை பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். விற்பவர் வாங்குபவர் இரண்டு நபர்களும் பதிவாளர் முன் ஆஜராகி சம்மதம் தெரிவித்த பின்னர் அந்த சொத்து உரிமை மாற்றம் செய்யப்படும்.  

சொத்தின் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொள்ள என்ன செய்வது?

குறிப்பிட்ட சொத்து அமைந்துள்ள பகுதியின் துணைப் பதிவாளர் அலுவலகங்களில் அந்தந்தப் பகுதிகளின் வழிகாட்டி மதிப்பு விவரங்கள் கிடைக்கும். 
உரிமை மாற்றம் செய்யப்படவுள்ள சொத்தின் சர்வே எண் அல்லது  பகுதியின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை தெரிந்து  கேட்டு தெரிந்து கொள்ளலாம். இது சந்தை மதிப்பை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.  

சொத்தை பதிவு செய்ய கட்டணங்கள் கட்ட வேண்டுமா?

நாம் வாங்க உள்ள சொத்தின் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொண்டு, அதிலிருந்து ஏழு சதவிகிதத் தொகைக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். இது தவிர பத்திரப்பதிவுக் கட்டணமாக வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவிகிதம் செலுத்த வேண்டும். 


இந்த நடைமுறை என்பது சொத்து விற்கும் போது அல்லது வாங்கும் போது கடை பிடிக்கப்படும். ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்தை உரிமை மாற்றம் செய்து கொள்ளும்போது இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை. சொத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஒரு சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாயும், பதிவுக்கட்டணமாக இரண்டாயிரம் ரூபாயும் கட்டினால் போதும்.

 முத்திரைத்தாளில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும்?
விற்பவரது தெளிவான பெயர், தெளிவாக முகவரி, தகப்பனார் பெயர், வருவாய்துறையி ஆவணங்கள்படி அந்த நிலத்தின் விவரங்கள், அந்த இடத்தை விற்பதற்கு அவருக்கு உள்ள அதிகாரம் போன்றவையும், அந்த இடத்தை வாங்க சம்மதிக்கிற நமது பெயர், தெளிவான முகவரி, தகப்பனார் பெயர், அந்த இடத்தை விற்க வாங்க சம்மதித்த விவரம், அதற்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகளது பெயர் முகவரி விவரம் போன்றவை இடம்பெற வேண்டும். மேலும் ஆவணத்தில் விற்பவர் வாங்குபவரது சமீபத்திய புகைப்படங்களும் இடம்பெற வேண்டும். 

ஒரு பத்திர எழுத்தரை அணுகி உதவி கேட்டால், நமது மூல ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பதியப்பட வேண்டிய ஆவணத்தில் இடம்பெற வேண்டிய விஷயங்களை தெளிவாக எழுதி கொடுப்பார்கள். 

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி.?

இ.சி (EC - Encumbrance Certificate) எனப்படும் சொத்து வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். 

தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாக இ.சி பெற தரகரை நாட வேண்டும் அல்லது பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு குறைந்ததது  மூன்று முறையாவது செல்ல வேண்டிய இருக்கும். 
இனி அப்படி அலைய தேவை இல்லை. ஆன்லைனின் இசிக்கு விண்ணப்பிக்கும் போது அது வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பி வைக்கப்படும். 

இசி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு கூடுதல் வருஷத்துக்கும் கட்டணம். கொரியர் செலவு ரூபாய் 25.  என சுமார் 100 ரூபாய்ன் மொத்த செலவு.

சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி அலுவலகங்களில் இது இப்போதைக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இசி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

இசி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

பட்டா பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

பத்திரப்பதிவு முடிந்த பிறகு, அதாவது சொத்து உரிமை மாற்ற ஆவணங்கள் நமது கையில் கிடைத்த பிறகு, சம்பந்தபட்ட இடத்தின் பட்டாவையும் நமது பெயருக்கு மாற்றிக்க்கொள்வது நல்லது.  மனை அமைந்துள்ள கிராமத்தின் நிர்வாக அலுவலம் மூலம் பட்டாவுக்கு விண்ணபிக்க வேண்டும். வாங்கியுள்ள மனையின் பழைய ஆவணங்கள், அந்த மனையை வாங்கியதற்கான  தற்போதைய  பத்திரப்பதிவு ஆவணத்தின் நகல் இவற்றின் அடிப்படையில் பட்டா பெயர் மாற்றம் விண்ணப்பம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து, சம்பந்தபட்ட வட்டாச்சியர் மூலமாக பெயர் மாற்றபட்ட புதிய கிடைக்கும். பத்திரப்பதிவு ஆவணத்தில் உள்ள பெயரில் மட்டுமே பட்டா விண்ணப்பிக்க முடியும். 

வாரிசு சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும்?

சொத்தின் உரிமையாளர் இல்லாத பட்சத்தின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் சட்டபூர்வ உரிமையை வழங்குகிறது. சொத்தின் உரிமையாளர் தனது முதலீடுகளுக்கு நாமினிகள் எவரையும் நியமிக்காமல் இறந்திருப்பின் வாரிசு சான்றிதழ் அடிப்படையிலேயே வங்கிகள் அல்லது நிறுவனங்கள் அந்த சொத்தை வாரிசுகளுக்கு கொடுக்கும். இந்த வாரிசு சான்றிதழ் பெற சொத்தின் மீது உரிமை கோரும் வாரிசுகள், சட்ட ஆவணங்கள் அடிப்படையில் வட்டாச்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் உறுதிசெய்த பின்னர் இந்த  சான்றிதழ் வழங்குவார்.  சொத்தின் உரிமையாளர் இறந்த தேதி தெரியாமலோ அல்லது காலந்தாழ்ந்து இந்த சான்றிதழ் கோரும்பட்சத்தில் வட்டாச்சியர் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நீதிமன்றம் மூலம் இந்த சான்றிதழ் வாங்க வேண்டும். சொத்தின் உரிமையாளர் காணாமல் போனவராக இருந்தால் நேரடியாக நீதிமன்றம் மூலம் இந்த சான்றிதழ் வாங்க வேண்டும்.  
வாரிசுதாரர் சான்று விண்னப்பிக்கும்போது விண்ணப்பதாரர் சார்பாக நீதிமன்றம் ஒரு பொது அறிவிப்பு வெளியிடும். குறிப்பிட்ட சொத்தில் அல்லது நபருக்கு வேறு வாரிசுகள் அல்லது ஆட்சேபணைகள் இல்லை என அறிந்து கொண்ட பிறகே நீதிமன்றம் இந்த சான்றிதழை வழங்கும். 

நன்றி : நாணயம் விகடன்





No comments:

Post a Comment