யு.ஏ.என்.நம்பரைக் கொண்டு பி.எஃப். கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
சேமலாப கணக்கு எனப்படும் பிஎப் கணக்கை வைத்திருக்கும் பெரும்பாலானோர், தற்போது யுனிவெர்சல் அக்கவுண்ட நம்பரை (UAN எண்) நாம் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் பெற்றிருப்போம்.
பிஎப் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு உறுப்பினரும், தங்களது கணக்கின் இருப்பைச் சுலபமாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள இந்தப் UAN எண் ஒதுக்கப்பட மத்திய அரசு அறிவித்தது. இதன் பிடி ஈபிஎஃப்ஓ அமைப்பு அனைத்து ஊழியர்களுக்கு குறிப்பிட்ட வழி முறையில் யுனிவெர்சல் அக்கவுண்ட நம்பரை அளித்தது.
இப்புதிய எண் மூலம், நீங்கள் எத்தனை முறை உங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றினாலும் UAN எண் மூலம் அனைத்து பிஎப் கணக்குகளையும் இணைத்துக்கொள்ளலாம். (ஒரு நிறுவனத்திலும் உங்களுக்கு தனிப்பட்ட பிஎப் கணக்கு துவங்கப்படும்.) நீங்கள் பிஎப் கணக்கு வைத்துள்ள வரை அல்லது நீங்கள் பணி செய்யும் காலம் வரை அனைத்து கணக்குகளும் உபயோகப்படுத்தில் இருக்கும்.
எனவே ஓரே ஒரு எண்ணை கொண்டு அனைத்து கணக்குகளின் விபரங்களையும் சேர்ப்பதே இந்த UAN எண்ணின் பணி. பெருமளவிலான தொழிலாளர்கள் தற்போது இந்த எண்ணைப் பெற்றுவிட்ட நிலையில் இந்த எண்ணைக் கொண்டு கணக்கிலுள்ள இருப்பை எப்படி தெரிந்துக்கொள்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
இ-பிஎப் கணக்கு இருப்பை எவ்வாறு தெரிந்து கொள்வது?
இதைச் செய்ய நாம் முதலில் இந்த (http://uanmembers.epfoservices.in/) இணைய முகவரிக்குச் செல்லவேண்டும்.
பின்னர் அந்தத் தளத்தில் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை (லாகின்) பகுதியைக் காணலாம். அதன் கீழ் உங்களுடைய கணக்கை செயல்படவைக்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம். "activate your login" என்ற இந்தத் தொடர்பை அழுத்திய பின் "நான் அனைத்து அறிவுறுத்தல்களையும் புரிதுள்ளேன்" என்பதைக் குறிக்கும் "I have understood the instructions" என்ற தகவல் தேர்வு செய்யும் வசதியோடு (டிக் செய்தல்) திரையில் வருவதைக் காணலாம்.
இந்தக் கட்டத்திற்குப் பிறகு உங்களுக்குப் பூர்த்தி செய்வதற்கான சில அறிவுறுத்தல்கள் தரப்படும்:
1) உங்கள் பொதுக்கணக்கு எண்ணை பதிவு செய்யவும்
2) உங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்யவும்
3) மாநிலம் மற்றும் அலுவலகத்தைத் தேர்வு செய்யவும்
4) இங்கே தரப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் பதிவு செய்யவும்
அதன் பின்னர் உங்களுடைய அலைபேசியில் (மொபைலில்) உங்களுக்கான கடவு எண் (பின் நம்பர்) அனுப்பப்பட்டுக் கிடைக்கும். அதனைக் கொண்டு நீங்கள் உங்களுக்கு விருப்பமான புதிய கடவுச்சொல்லை (password) தேர்வு செய்து உங்கள் யுஏஎன் குறியீட்டை அல்லது எண்ணை உபயோகிப்புப் பெயராக (லாகின் நேம்) பயன்படுத்தி உங்களுடைய யுஏஎன் கார்டையும் பி எப் கணக்குப் புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்யவும்
பி எப் கணக்குப் பரிமாற்ற விவரங்களைக் காணவும் செய்யலாம். நீங்கள் உங்கள் கணக்கின் இருப்பைத் தெரிந்து கொள்வதற்கு முன் இந்த யுஏஎன்-எண் மற்றும் பி எப் விவரங்கள் பெறுவது மிகவும் முக்கியம்.
நீங்கள் பணிசெய்யும் நிறுவனம் உங்களுக்கு இந்த எண்ணைப் பெறுவதற்கான முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றால் நீங்கள் அவர்களை உடனடியாக அதனைச் செய்யச் சொல்லலாம்.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 08.12.2015
No comments:
Post a Comment