இன்ஜினீயரிங் கவுன்சலிங்… இம்பார்ட்டன்ட் தகவல்கள்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் பொறியியல் படிப்பில் சேரவிருக்கிறார்களா? அதற்கான முதற்கட்ட நடைமுறையான கவுன்சலிங் பற்றிய குழப்பம், தயக்கத்தில் இருக்கிறீர்களா? இதோ… அது குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் விதமான தகவல்கள் தருகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

விண்ணப்பம்
வரும் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங்குக்கு,www.annauniv.edu என்ற ஆன்லைன் முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் (லிங்க்:https://www.annauniv.edu/tnea2016). விண்ணப்பிக்கத் தெரியாத சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ள சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாட்களுக்குள், ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தில் மதிப்பெண்களைக் குறிப்பிட்டு, அந்த ஆன்லைன் விண்ணப் பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்பத்துடன் கோரியுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, விண்ணப்ப எண்ணுடன் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

செயலாளர்,
தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன்ஸ்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை – 600 025.
தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன்ஸ்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை – 600 025.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்
1. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று
1. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று
2. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று அல்லது அதற்கு இணையான படிப்புக்கான சான்று
3. மாற்றுச்சான்றிதழ் (Transfer cerificate)
4. சாதிச்சான்றிதழ்
5. 12-ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு
6. நேட்டிவிட்டி சான்று
7. முதல் தலைமுறை எனில் அதற்கான சான்று
8. விளையாட்டுத் துறையில் இருந்தால் அதற்கான சான்று
9. மாணவரின் பெற்றோர் முன்னாள் ராணுவ வீரர் எனில் அதற்கான சான்று
10. மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்று
இவை அனைத்திலும் விண்ணப்ப எண்ணைக் குறிக்க மறக்க வேண்டாம். விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது (தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ரூபாய் 250 மட்டும்). கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு இன் ஜினீயரிங் அட்மிஷன்ஸ், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து, அதனையும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அனுப்பவும்.
மதிப்பெண் தகுதி
பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்கான மதிப்பெண் அட்டவணை…
பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்கான மதிப்பெண் அட்டவணை…
கட் ஆஃப் காணும் முறை
கணிதம் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/2
கணிதம் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/2
இயற்பியல் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/4
வேதியியல் – 200-க்கு எடுத்த மதிப்பெண்கள்/4
இந்த மூன்று மதிப்பெண்களின் சராசரியைக் கூட்டவும். உதாரண மாக, கணிதத்தில் 200 எனில் 200/2 = 100; இயற்பியலில் 198 எனில் 198/4 = 49.50; வேதியியலில் 199 எனில் 199/4 = 49.75. ஆக, மொத்த கட் ஆஃப் = 199.25.
மறுமதிப்பீடு… கவலை வேண்டாம்!
தேர்வு முடிவுகள் வெளியானதும் சில மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். அது கவுன்சலிங் தேதியை பாதிக்குமா என்ற கவலை வேண்டாம். மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இருக்குமாயின் அதற்கான சான்றி தழைப் பெற்ற பின் அதன் நகலை தனியாக அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். அதன் அடிப்படையிலான கட் ஆஃப் மதிப்பெண்ணைப் பொறுத்து, அதற்கான தேதியில் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
முதல் பட்டதாரி சான்று
முதல் பட்டதாரி எனில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் அவர்களுக்குக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். எனவே, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் உறுதிபெற்று இணைக்க வேண்டும். பெற்றோரின் பெயரில் இருக்கும் நேட்டிவிட்டி சான்றிதழும் முக்கியம். விண்ணப்பிக்கும் மாணவரின் அண்ணன், அக்கா போன்றோர் இந்தச் சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தி இருந்தால், இப்போது விண்ணப்பிப்பவர்கள் இதைப் பெற இயலாது.

கவுன்சலிங்குக்கு செல்லும் முன்…
கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்து, எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை முன்னரே ஆலோசித்து, 5 கல்லூரிகளை ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளவும். கவுன்சலிங்கில் ஒரு கல்லூரி கிடைக்காமல் போனால், லிஸ்ட்டில் உள்ள மற்ற கல்லூரிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஒரே பெயரில், எழுத்து வித்தியாசத்தில் பல கல்லூரிகள் உள்ளன என்பதால், குழப்பங்களைத் தவிர்க்க கல்லூரிக்கான குறியீட்டு எண்ணையும் தெளிவாக குறித்துச் செல்லவும். தேர்ந்தெடுக்க நினைக்கும் கல்லூரிகளைப் பற்றி நேரடியாக பார்வையிட்டும், அங்கு படித்த, படிக்கும் மாணவர்களிடம் விசாரித்தும் முடிவெடுக்கவும். தரகர்களை நம்ப வேண்டாம்.
மெயில் ஐ.டி முக்கியம்
எந்த மெயில் ஐ.டி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்தீர்களோ, அந்த மெயில் ஐ.டி-க்குதான் கவுன்சலிங்கில் கலந்துகொள்வது குறித்த கடிதம் அனுப்பப்படும். எனவே, அதை செக் செய்தவண்ணம் இருக்கவும். சேவை மையம் மூலம் விண்ணப்பிப்பவர்கள், பாஸ்வேர்டை அங்கு பகிர வேண்டாம். கவுன்சலிங் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு, `www.annauniv.edu’ எனும் இணையதள முகவரியைப் பார்வையிடவும்.

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்…
கல்விக் கடன் பெற, ரிசல்ட் வரும் முன்பாகவே பெற்றோரின் வங்கி அக்கவுன்ட்டுடன் இணைந்து ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கவும்.
கல்விக் கடன் பெற, ரிசல்ட் வரும் முன்பாகவே பெற்றோரின் வங்கி அக்கவுன்ட்டுடன் இணைந்து ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கவும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கவுன்சலிங் அறையில் மற்றவர்களின் விருப்பம் மற்றும் அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் கல்லூரிகள் பற்றி ஆலோசனையோ, விவாதமோ வேண்டாம்.
கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபெறும். வேறு இடத்தில் நடைபெறும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
தரகர்களை நம்பி ஏமாறுவதைத் தவிர்க்கவும்.
ஆன்லைனில் முதல் முறை விண்ணப்பிப்பதால், தவறு செய்துவிடுமோமோ போன்ற வீண்பயத்தைத் தவிர்க்கவும். ஒருவேளை விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் அது குறித்து மெயில் அனுப்பிவைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
நன்றி : அவள் விகடன் - 17.05.2016
No comments:
Post a Comment