disalbe Right click

Monday, May 23, 2016

அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராக

அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராக 
என்ன செய்ய வேண்டும்?

இப்போது எல்லாமே ஆப் மயம்தான். டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், கல்வி சார்ந்த ஆப்களும் கொட்டிக்கிடப்பதை நாம் அறிவோம். ஆனால், அதில் எந்த ஆப் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக அமையும், நம் வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்ள உதவும் என்பதில்தான் நம் திறமை வெளிப்படும்.
இந்திய வரலாறு தொடங்கி , கணிதம், அகராதி, செயல்திறன், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு... என துறைதோறும் குவிந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான ஆப்ஸில் சிறந்தது எது என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இங்கே...
TNPSC தமிழ்
இதில், டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் தேர்வுகள் , வி.ஏ.ஓ மற்றும் TET தேர்வுகளுக்கான தினசரி வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், தேர்வு வரைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள உதவும். எந்தெந்த துறையில் அரசு பணிகளுக்கான வாய்ப்பு இருக்கிறது , எத்தனை இடங்கள் இருக்கின்றன என பல்வேறு தகவல்களைத் தெரிவித்துக்கொண்டே இருக்கும். இதில் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், திறனாய்வு மற்றும் மனத்திறன் பயிற்சி, பாடத்திட்டம் என அரசு தேர்வுகளுக்கு படிக்கவும் பயிற்சி எடுத்துக்கொள்ளவும் உதவும் சூப்பர் ஆப்.
IAS
பெயரைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும். இது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது. நடப்பு நிகழ்வுகள், கேள்வி-பதில்கள், குறிப்புகள், தேர்வுமுறைக்கான பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் எனத் தேர்விலும் வாழ்விலும் தேர்ச்சி பெறுவதற்கான பெஸ்ட் ஆப்.
Indian History , Book & Quiz
இந்திய வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஆப். 9000 BC பீம்பெட்கா ராக் ஷெல்டர்ஸ் (BHIMBETKA ROCK SHELTERS) தொடங்கி, சிந்துசமவெளி நாகரிகம் முதல் இந்தியாவின் மன்னர்கள் ஆட்சி , சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் என இந்திய வரலாற்றை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். வரலாறு என்றவுடன் `ஐயய்யோ...அது பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்குமே!' என சோர்ந்து போக வேண்டாம். வரலாற்று நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளாத சுவாரஸ்ய தகவல்களையும் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். கலிங்கப் போர் என்றால், வருட ரீதியிலான முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ஆப்பில், அந்த முக்கிய நிகழ்வுகளுடன் அதற்கான பின்னணியை சொல்வதோடு நிகழ்வுகளுக்கான காரணங்களை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லும். ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஆப்களில் இதுவும் ஒன்று.
Math Tricks
பிரைன் ட்ரெய்னர் ஆப்பான இதன் மூலம் கூட்டல், வகுத்தல், பெருக்கலைத் தாண்டி, கணிதத்தின் வெவ்வேறுவிதமான செயல்முறைகளையும், அதை சுலபமாகக் கையாளும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மேலும், சட்டென பதிலைச் சொல்லி சடுதியில் அசத்த, இந்த ஆப் நிச்சயம் உதவும்.
World G.K
பொதுஅறிவுப் பிரியரா நீங்கள்? உலகத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுத் தருகிறது இந்த ஆப்.
Aptitude
போட்டித் தேர்வுகளிலேயே பொக்கிஷமாகத் திகழ்வது ஆப்டிட்யூட் கேள்விகள். காரணம், கேள்விகளுடன் பதில்களையும் கொடுத்து, கொள்குறியின் மூலம் பதில்களைத் தேர்வுசெய்தால் போதும் என்பதால் என்பதால், இந்த வகை தேர்வில் அநேகர் வெற்றி பெறுவர். இருப்பினும் அதில் சாதாரண வெற்றி பெறுவதைவிட மகத்தான வெற்றி பெற்று மதிப்பெண்கள் மூலம் நமக்கான பதவியைத் தேடித்தரக்கூடிய தோழமையான ஆப் இது.
English to Tamil
தமிழ் அகராதி ஆப். நாம் அன்றாடம் பழகக்கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து, தமிழின் சாரத்தை ஆழமாகப் பதியவைக்கக்கூடிய வார்த்தைகளுக்கான பொருள்கள் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பது போன்ற வார்த்தைகளுக்கான விளக்கங்களை தெரிந்துகொள்வதோடு, வார்த்தை விளையாட்டு விளையாடுவதற்கான தமிழ் வார்த்தைகளை சுலபமாகத் தெரிந்துகொள்ளவும், பொது அறிவு, தினசரி செய்தி சுருக்கம், திறனாய்வு என பல தரப்புகளில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கான பொருளை அறிந்துகொள்ளவும் இந்த ஆப் கைகொடுக்கும்.
- கே. அபிநயா
நன்றி : விகடன் செய்திகள் - 23.05.2016

No comments:

Post a Comment