தமிழில் பிரதமர் அலுவலக இனையதள சேவை
என்ன செய்ய வேண்டும்?
தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்கம், மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை மே 29 அன்று தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதிய சேவைகளை தொடங்கிவைத்தார்.
இதற்கு முன்பு
என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலகச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். பிரதமர் அலுவலக இணையதளச் சேவையை முக்கிமான பிராந்திய மொழிகளிலும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
தி இந்து தமிழ் நாளிதழ் - 08.06.2016
No comments:
Post a Comment