ஜப்பானில் செலவின்றி படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஜப்பான் அரசின், எம்.இ.எக்ஸ்.டி., என்ற கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2017ம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது.தகுதிகள்:
பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏப்ரல் 2, 1995 - ஏப்ரல் 1, 2000ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
சிறப்பு பயிற்சி கல்லூரி (3 ஆண்டுகள்):
தொழில்நுட்பம், சுய கவனிப்பு மற்றும் உணவூட்டவியல், கல்வி மற்றும் நலத்துறை, வர்த்தகம், ஆடை வடிவமைத்தல் மற்றும் குடும்ப பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி உள்ளிட்ட படிப்புகள்.
தொழில்நுட்ப கல்லூரி (4 ஆண்டுகள்):
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் அண்ட் நெட்வர்க் இன்ஜினியரிங், மெட்டீரியல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக் அண்ட் சிவில் இன்ஜினியரிங், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகம் (5 ஆண்டுகள்):
சட்டம், அரசியல், ஆசிரியரியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் அறிவியல், மின் மற்றும் மின்னணு, மெக்கானிக்கல், கட்டடக்கலை மற்றும் சிவில் உள்ளிட்டவை.
விதிமுறைகள்:
ஜப்பான் அரசு நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, கல்விக்கட்டணம், விமானக் கட்டணம் (தோராயமாக, மாதம் 71 ஆயிரம் ரூபாய்) உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சி காலத்தில், முதல் ஆண்டு ஜப்பானிய மொழியை கண்டிப்பாக பயில வேண்டும். மீதமுள்ள காலத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை அந்தந்த கல்லூரிகளில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17, 2016
மேலும் விவரங்களுக்கு:
www.in.embjapan.go.jp ,
ஜப்பானிய தூதரக வளாகம்
(கலாசாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறை), சென்னை.
தொலைபேசி: 044- 24323860,
044-24323863.
நன்றி : தினமலர் - கல்வி மலர் - 16.06.2016
No comments:
Post a Comment