கிரடிட் கார்டு அக்கவுண்டை மூட என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூட உங்களுக்குச் சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதனைச் சரியான முறையில் மூடவில்லை என்றால் உங்களது கடன் புள்ளி எனப்படும்
கிரேடிட் ஸ்கோர் அதிகளவில் பாதிப்படையும். நீங்களாகவே உங்கள் கிரெடிட் கார்ட்டை அழிப்பதன் மூலம் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு கணக்கு மூடப்பட்டுவிடாது. கிரெடிட் கார்டு கணக்கை மூட சில குறிப்பிட்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றியாக வேண்டும்.
அப்போது தான் இந்தச் செயல்முறையில் உங்களது கடன் புள்ளிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அதிகமான கட்டணங்கள், கட்டுப்பட முடியாத ஷாப்பிங் பழக்கவழக்கம், உயர்ந்த அளவிலான வட்டி விகிதங்கள் எனப் பல்வேறு காரணங்களால் ஒருவர் தன் கிரெடிட் கார்டு கணக்கை மூட விரும்பலாம்.
உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள், இதோ!
நிலுவை தொகைகளை அடைத்தல்
உங்கள் கிரெடிட் கார்டு கணக்கில் நீங்கள் கட்ட வேண்டிய நிலுவை தொகை ஏதேனும் இருந்தால், நீங்கள் தொகையை முழுவதுமாகச் செலுத்தாத வரையில் வங்கிகள் உங்கள் கணக்கை மூடாது.
கணக்கை மூடுவதற்கு முன்பு, உங்கள் நிலுவை இருப்புப் பூஜ்யமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதனை உறுதி செய்ய, கிரெடிட் கார்டு பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். அந்த மாதத்திற்கான பில் வரும் வரை காத்திருக்கவும். கணக்கை மூடுவதற்கான படிவத்துடன் ஒருவர் தன்னுடைய பில் நகலையும் சேர்த்துச் சமர்ப்பிக்கலாம்.
வங்கிகளுக்குச் செல்ல வேண்டும்
கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதென்றால் நீங்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும், அதுதான் சரியான முறை.
அப்போது தான் உங்களால் சான்றொப்ப நகலைப் பெற முடியும். கணக்கை மூடுதல் தொடர்பான வினாக்களுக்கு இது பெரிதும் உதவும். இருப்பினும், தொலைப்பேசி வங்கியியல் மூலமும் கூட ஒருவர் தன் கிரெடிட் கார்டு கணக்கை மூடிக்கொள்ளலாம்.
மூடுவதற்கான படிவத்தை நிரப்பி அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். ஆனால் வருங்கால மேற்கோள்களுக்கு, அதனை ஒரு நகல் எடுக்க மறந்து விடாதீர்கள்.
கணக்கு மூடப்பட்டதற்கான உறுதிப்பாடு கிடைக்காத வரை வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதீர்கள்.
மீட்டு (ரிடீம்) புள்ளிகள், ஏதேனும் இருக்கிறதா..?
கிரேடிட் கார்டு கணக்கை மூடும் அவசரத்தில், உங்கள் கார்ட்டில் ஏதேனும் ரிடீம் புள்ளிகள் உள்ளதா என்பதைக் கவனிக்க மறந்து விடாதீர்கள்.
உங்களுக்குச் சேர வேண்டிய கேஷ் பேக், வெகுமதிகள் அல்லது புள்ளிகளை எல்லாம் உரிய முறையில் பெற்று விடுங்கள்.
வருடாந்திர கட்டணம் செலுத்துதல்
வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு முன்பாகவே உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூட அறிவுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் வருடாந்திர கட்டணத்தை உங்கள் மீது வங்கி திணித்து விடும்.
கடன் புள்ளிகள்
கடன் புள்ளிகள் கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதால் உங்கள் கடன் புள்ளிகள் பாதிப்படையும். அதற்குக் காரணம் உங்களது மொத்த கடன் வரம்பின் அளவு குறைந்து, பயன்பாடு விகிதம் அதிகரித்து விடும்.
உங்களது கடனை கட்ட முடியாமல் போவதால் கூட நீங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூட முற்படலாம். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு கணக்கை மூட வேண்டும் என்றால், அதனை ஒன்றின் பின் ஒன்றாக மெதுவாகச் செய்யவும்.
பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டு கணக்குகளை மூடி விடுவது நல்லது. ஆனால் சமீபத்தில் வாங்கிய கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதே நல்லது; உங்களது செயலாற்றலை கணக்கிடப் பழைய கிரெடிட் கார்டு தான் உதவியாக இருக்கும்.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 15.06.2016
No comments:
Post a Comment