disalbe Right click

Sunday, June 5, 2016

காலரா நோய் - வராமல் தடுக்க


காலரா - என்ன செய்ய வேண்டும்?
காலரா என்பது என்ன?
'விப்ரியோ காலரே' எனும் பாக்டீரியா கிருமியால், தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய் காலரா. 

இந்நோய் தொற்று எவ்வாறு பரவுகிறது?
காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளி, திறந்த வெளியில் மலம் கழிப்பதால், அதில் உட்காரும் ஈக்கள், காலரா கிருமிகளை சுமந்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உட்காரும். இந்த உணவுகளையும் தண்ணீரையும் பயன்படுத்தும் போது காலரா பரவுகிறது. 

காலராவின் அறிகுறிகள் என்ன?
கடுமையான வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு. இதனால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். காலரா தீவிரமடைந்தால், சிறுநீர் குறைவாக வெளியேறும். மயக்கம் வரும். 

காலராவிற்கு தடுப்பு மருந்து உள்ளதா?
வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிர்த் தடுப்பு மருந்து உள்ளது. காலரா தடுப்பு மருந்தை குழந்தை 

பருவத்தின் போதே கொடுக்க வேண்டுமா?
காலரா தடுப்பு மருந்தை சிறுவயதிலேயே பொதுவாக கொடுப்பதில்லை. ஆனால், காலரா பரவும் காலத்தில் இதை போட்டுக் கொள்ளலாம். மேலும் காலரா பாதிக்கும் ஆபத்துள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு இது போடப்படுகிறது. 

காலரா பரவாமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
கழிவுநீர் கால்வாய், சாக்கடைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது. தேவையான இடங்களில் போதுமான கழிப்பறைகளை, அரசு கட்டித் தர வேண்டும்.

காலரா வராமல் தடுக்க, வீடுகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
கழிப்பறை சென்று வந்ததும், நன்றாக கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து, குடிக்க வேண்டும். 

யாருக்கெல்லாம் காலரா வரும் அபாயம் உண்டு?
சுகாதாரமில்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கும், உணவை உண்பவர்களுக்கும் காலரா பாதிக்கும் அபாயம் அதிகம். 

காலரா பாதித்தவர் என்ன மாதிரியான உணவு வகைகளை உண்ண வேண்டும்?
பொதுவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை உண்ண வேண்டும். அரிசி கஞ்சி. பார்லி கஞ்சி கொடுக்கலாம். நீர் ஆகாரங்களை, குறிப்பிட்ட இடைவெளியில் குடிக்க வேண்டியது அவசியம்.

காலராவிற்கு சிகிச்சை என்னென்ன?
காலரா பாதிப்பு இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும். சிறுநீரின் அளவை கண்காணிக்க வேண்டும். மலத்தில் உப்பு சத்து அதிகமாக வெளியேற வாய்ப்புள்ளதால், உப்பு சத்து குறையும் ஆபத்து உள்ளது. எனவே அதையும் சமன் செய்ய பொட்டாசியம் என்ற உப்பை மருந்து வடிவில் ஏற்ற வேண்டும். குழந்தைகள் முதியோர் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு, மேற்சொன்ன ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு அதிக கண்காணிப்பு தேவை.

- எஸ்.சுப்ரமணியன்
தொற்று நோய் சிறப்பு நிபுணர், சென்னை.
044 - 22777000

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.05.2016

No comments:

Post a Comment