disalbe Right click

Thursday, June 2, 2016

வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள்


வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி 
உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை. அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பிரிட்டன்
BRITISH CHEVENING SCHOLARSHIPS
இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகையைப் பெற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சாராத, இதர 116 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விபரங்களுக்கு www.chevening.org
COMMONWEALTH SCHOLARSHIPS
இந்த உதவித்தொகை, காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பிரிட்டனில், உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
டியூஷன் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், விமானப் போக்குவரத்து கட்டணம் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய கட்டணங்கள், இந்த உதவித்தொகைக்குள் அடங்கும்.
இதைப்பற்றிய விபரங்களுக்கு www.cscuk.dfid.gov.uk
அமெரிக்கா
USA FULBRIGHT SCHOLARSHIPS
சர்வதேச மாணவர்களுக்காக, அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை இது. படிப்பு காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த உதவித்தொகை.
இதுபற்றிய முழு விபரங்களுக்கு www.iie.org/en/Fulbright
ROTARY FOUNDATIONS AMBASSADORIAL SCHOLARSHIPS
தனியார் பங்களிப்பின் மூலமாக, இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
விரிவான விபரங்களுக்கு www.rotary.org/en/studentsandyouth/educationalprograms/
ambassadorialscholarships/Pages/ridefault.aspx
ஆஸ்திரேலியா
AUSTRALIA AWARDS SCHOLARSHIPS
திறமையும், தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு AusAID -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விரிவான விபரங்களுக்கு www.australiaawards.gov.au
இதர உதவித்தொகை திட்டங்கள்
IELTS SCHOLARSHIPS
ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ரூ.3 லட்சம் மதிப்பிலானது மற்றும் டியூஷன் கட்டணத்தை ஈடுசெய்வதற்கானது இது.
மேலதிக விபரங்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/scholarships
TOEFL SCHOLARSHIPS
நல்ல அகடமிக் செயல்பாடும், சிறந்த ஆங்கில புலமையும் உடையவர்களுக்காக, ETS -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிற்காக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 20 உதவித்தொகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
விரிவான விபரங்களை அறிய www.ets.org/toefl/scholarships.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 03.06.2016

No comments:

Post a Comment