disalbe Right click

Friday, July 8, 2016

பட்டாசுக் கடை உரிமம் பெற


பட்டாசுக் கடை உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

2008ம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்படி பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு,

*** பட்டாசுக் கடை உரிமம் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

***   குடோனுடன் கூடிய பெரிய பட்டாசுக்கடை லைசென்ஸ் எடுக்க   சென்னையில் உள்ள Revenue Officer, Greater Chennai Corporation, Chennai-3. என்ற முகவரியை அணுக வேண்டும்.


***  பட்டாசு கடை வைக்கும் இடமானது கல் மற்றும் தார்ச்சு (கான்கிரீட்) கட்டிடமாகத்தான் இருக்க வேண்டும் .

*** பட்டாசுக்  கடையின், இரு புறங்களிலும் வாசல் கட்டாயம் இருக்க வேண்டும். 

*** பட்டாசுக் கடையில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

***கடை வைக்கப்படும் இடமானது இருக்கும் பகுதியின் பஞ்சாயத்து அல்லது டவுன் பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபட பிரதிகள் ஆறு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

***போலீஸ், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 முக்கிய துறைகளில் இருந்தும் அனுமதி (தடையின்மைச் சான்று) பெற வேண்டும். 

 ***தற்காலி பட்டாசுக் கடை வைத்து  விற்பனை செய்வதற்கும் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதற்கும் தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, போலீஸார் ஆகியோரிடம் இருந்து தடையில்லா சானறிதழ் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

***நீங்கள் பட்டாசுக் கடை வைக்கப்போகும் இடம் அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரியிடம் இருந்து, உதாரணத்துக்கு மாநகராட்சி, நகராட்சியாக இருந்தால் கமிஷனர் அவர்களிடமிருந்து, டவுன் பஞ்சாயத்தாக இருந்தால் செயல் அலுவலர் அவர்களிடமிருந்து இருந்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். 

*** பட்டாசுக் கடையானது வாடகைக் கட்டிடமாக இருந்தால் நோட்டரி பப்ளிக் வக்கீல் கையெழுத்துடன் கூடிய வாடகை ஒப்பந்த பத்திரம், உரிம கட்டணம், 500 ரூபாய் செலுத்தி அதற்கான அசல் சலானுடன், மூன்று பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவுடன்  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கும் காலகட்டத்தில் மனு கொடுக்க வேண்டும்.

***பட்டாசு கடைக்கு உரிமம் பெற்றவர்கள் உரிமம் பெற்ற கட்டிடத்தில்  அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலும் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது. 

*** அனுமதி பெறாத இடங்களில் பட்டாசுகளை ஸ்டாக் வைக்கக்கூடாது.

***ஒரு பட்டாசுக் கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 

***உதிரிபட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. 

***வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளை வெடித்து காட்டக்கூடாது. 

***கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் சேரவிடக்கூடாது.

*** தீப்பற்றக்கூடிய பொருட்களை கடையில் வைத்திருக்கக் கூடாது.

*** பட்டாசுக் கடையிலோ அல்லது கடையின் அருகிலோ புகை பிடிக்கக் கூடாது. இது பற்றிய அறிவிப்பையும் பார்வையில் படும் இடங்களில் எழுத வேண்டும்.

*** பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் பெற்ற கடையில், இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.  

*** பட்டாசு கடைக்கு பெற்ற உரிமத்தை தணிக்கையின் போது அலுவர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.

*** கடையின் வெளிச் சுவற்றில் பார்வையில் தெரியும்படியாக கடையின் பெயர்,  உரிமம் எண்,உரிமம் பெற்றவர் பெயர், அனுமதிக்கப்பட்ட பட்டாசு இருப்பு, அதன் வகைகளை பெயிண்டினால் எழுதி வைக்க வேண்டும்.

***பட்டாசுகளின் இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பாராமரிக்கப்பட வேண்டும்.

*** பட்டாசுக் கடை வைப்பதற்கு அனுமதி பெற்றவர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய  வேண்டும்.

*** 270 சதுர அடியில் மட்டுமே பட்டாசு கடை அமைக்க வேண்டும். அதிக அளவில் பட்டாசுகளை தேக்கி வைக்கக் கூடாது. பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், வழிபாட்டுத் தலங்கள், மின் விநியோக பெட்டிகள் அருகே பட்டாசு கடை அமைக்க அனுமதி கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு கடை யில் வைத்து பட்டாசுகளை வெடித்துக் காட்ட கூடாது. கடைக்கு உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனித்தனி வழி அமைக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இதை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளை மீறும் பட்டாசுக் கடைகள் பற்றி அப்பகுதியின்  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது  வட்டாட்சியர் அவர்களிடம் புகார் கொடுக்கலாம்.

பட்டாசு கடைகளில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும், தாசில்தாருக்கும், உரிமம் வழங்கிய அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment