காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய வைக்கலாம்!
என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் அரசு அதிகாரியாக இருந்து, நீதிமுறை நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும், சட்டத்திற்கு முரணானது என்று தெரிந்து இருந்தும், அவரால் அளிக்கப்படுகின்ற அறிக்கை, கட்டளை அல்லது தீர்ப்பு வேறு எதையாவது நெறிகேடான முறையில் அல்லது குரோத மனப்பான்மையுடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற (காவல்துறை அதிகாரி மட்டுமல்ல) யாராக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார். அபராதமும் விதிக்கப்படுவார். அல்லது இரண்டுமே விதித்து தண்டிக்கப்படுவார்.
கைது செய்யப்படக்கூடிய குற்றம் செய்தவரை, கைது செய்யாமல் விட்டு வைக்கும் காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டிய புகாரில், சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்கின்ற காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
சட்டத்துக்கு முரணாக தீர்ப்பு வழங்கினாலும், ஊழல் முறையில் அல்லது தீய நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதியைக்கூட இந்தப்பிரிவின் கீழ் தண்டணைக்கு உள்ளாக்கலாம்.
சட்டத்துக்கு முரணாக தீர்ப்பு வழங்கினாலும், ஊழல் முறையில் அல்லது தீய நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதியைக்கூட இந்தப்பிரிவின் கீழ் தண்டணைக்கு உள்ளாக்கலாம்.
No comments:
Post a Comment