disalbe Right click

Saturday, July 9, 2016

பொய்யாவணம் புனைதல்-தண்டணை


பொய்யாவணம் புனைதல்-தண்டணை-என்ன செய்ய வேண்டும்?

பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்தவர் ஆவார்.

உதாரணமாக, 
பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் அந்த சங்க நிர்வாகிகளால் நிறைவேற்றப் படுகின்றன. அதனை ஏற்றுக் கொண்டு உறுப்பினர்கள் கையெழுத்து போட வேண்டும். தேவையான கையெழுத்துக்களைப் போட அதிகமான உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
உறுப்பினர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்பதை மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நிரூபிப்பதற்காக பொய்யான பல கையெழுத்துக்கள் அந்த சங்க நிர்வாகிகளால் போடப் படுகிறது. மாவட்டப் பதிவாளர் அவர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யாவணம் தயாரிக்கப் படுகிறது. இதில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் இந்தப் பிரிவி்ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
அளிக்கப்படுகின்ற தண்டணை
பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” ஏழு ஆண்டுகள்வரை நீடிக்கக் கூடிய சிறைத் தண்டணைக்கு உள்ளாக்கப் படுவார். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

மேலும் இதற்கு பிடியாணை தேவையில்லை. ஜாமீனும் கிடையாது.

No comments:

Post a Comment