பாதையில்லா நிலத்திற்கு பாதை - என்ன செய்ய வேண்டும்?
பாகப் பிரிவினை பத்திரம் மூலமாக கிடைத்த சொத்தில் பாதைக்காக எந்த ஒரு உரிமையும் குறிப்பிடப்படாமல் இருந்தால் உங்கள் உறவினரிடமிருந்து நீங்கள் உங்களுக்கு கிடைத்த நிலத்திற்கு, பாதைக்கான உரிமையைக் கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.
ஒரு வேளை உங்களுடைய பாகத்துக்கு வந்த நிலத்துக்கு நான்கு புறங்களிலும் பாதை இல்லாமல் இருந்தால், நீதிமன்றம் மூலமாக பாதையைப் பெறலாம்.
அதற்கு நீங்கள், உரிய நீதிமன்றத்தில் வசதியுரிமை பாத்தியப்படி [EASEMENT OF NECESSITY] உங்கள் பாக நிலத்துக்கு நான்கு புறங்களிலும் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிடும் நிலப்பகுதியைப் பாதையாக பயன்படுத்தும் உரிமையைப் பெறலாம்.
No comments:
Post a Comment