விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் இனி பிரச்சனையில்லை!
சென்னை: 'விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வோர், எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசாணை விபரம்:
* விபத்தில் காயமடைந்தவர்களை, கண்கூடாக பார்த்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்.
அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல், முகவரியை பெற்று வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
விபத்தில் சிக்கியோருக்கு உதவி செய்பவர்கள், எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்*
பெயர் மற்றும் சொந்த விபரங்களை தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது; அவற்றை தெரிவிப்பது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.
மருத்துவ துறையினரால் வழங்கப்படும் படிவங்களில், பூர்த்தி செய்யவும் கட்டாயப்படுத்தக் கூடாது*
அப்படி கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி செய்பவர்கள், தாமாக சாட்சி சொல்ல விருப்பத்தை தெரிவிக்கும் போது, அவரிடம் போலீசார் ஒரு முறை மட்டுமே விசாரணை மேற்கொள்ளலாம்;
கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது*
உதவி செய்வோர், காயமடைந்தோரின் உறவினராக இல்லாதபட்சத்தில், மருத்துவமனைகள் பணம் செலுத்தும்படி கோரக் கூடாது;
உடனடியாக, சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சையில் அக்கரை செலுத்தவில்லை என்றால், மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்*
அனைத்து மருத்துவமனைகளின் நுழைவாயிலிலும், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழியில், இதுதொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும், இந்த நடைமுறைகளை, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 22.10.2016
No comments:
Post a Comment