disalbe Right click

Monday, October 3, 2016

முதல் சந்திப்பிலேயே பிறரை கவர்வதற்கு


முதல் சந்திப்பிலேயே பிறரை கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதல்முறையா ஒருவரை சந்திக்கும்போதே இம்பரஸ் பண்ணுற மாதிரி நடந்துக்கணும்னு சொல்லுவாங்க. 

பெரும்பாலும்  'மூணு நிமிஷத்துல இருந்து 5 நிமிஷம் வரைதான் முதல்முறையா ஒருவர் கூட சந்திச்சு பேசும் சூழல் உருவாகும். 

அதுக்குள்ள எப்படிங்க இம்பரஸ்னு கேட்குறீங்களா? 

உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் இந்த 5 பாயிண்ட்ஸ். படிங்க இம்பரஸ் பண்ணுங்க. 


5. மீட்டிங்க்கு ரெடி ஆகுங்க : 

ஆபிஸ் கான்பரன்ஸ், ப்ரெண்ட்ஸ் பார்ட்டி, இன்டர்வியூனு இப்படிப்பட்ட இடங்களில் தான் புதுபுது நபர்களை சந்திப்போம். 

முன்னாடியே இந்த நபரைதான் மீட் பண்ணப்போறீங்கன்னு தெரிந்தால், அவரை பத்தி சில பேசிக்கான விஷயங்களை தெரிஞ்சுட்டுப் போங்க. 

அவர் கூட என்ன பேசப்போறோம்னு மனசுக்குள்ளயே சின்னதாக டிரைலர் ஓட்டிப்பார்த்து கொஞ்சம் ரெடி ஆகுங்க.  

ஃபர்ஸ்ட் டைம் பேசும்போதே, அவரை பற்றி தெரிந்திருப்பதால், 'பரவாயில்லையே. நம்மளை பற்றி தெரிஞ்சு வைச்சு இருக்காறே'னு ஒரு சின்ன இம்பரஷன் கிடைக்கும். 

'அட, என் நண்பரோட, நண்பரைதான் பார்க்கப் போறேன். இதுக்கு எல்லாம் எதுக்கு ரெடி ஆகணும்னு நினைக்காதீங்க.  

யாருன்னே தெரியாது... அப்பதான் திடீர்னு ஒருவரை மீட் பண்ணுறீங்கன்னா... உங்களை பற்றி சுருக்கமா செல்ப் இன்ட்ரோ கொடுத்து, அவரை பத்தியும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. 

4. உடையில் கவனம் : 

உங்க அறிவு, திறமை எல்லாம் உங்களை சந்திக்க வந்த நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

உங்களது உடையின் மீதும், முகத்தின் மீதும்தான் அவரது கவனம் இருக்கும். அதனால், உடையில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். 

சாதாரண டி-ஷர்ட் அணிந்தால் கூட அதில் ஒரு டீசன்ட் லுக் இருக்கணும் என்பதை மறக்காதீங்க. 

முகத்தை கொஞ்சம் ப்ரெஷாக வைச்சுக்கோங்க. அதுக்குனு மாடல் மாதிரி இருக்கணும்னு அவசியம் கிடையாது. 

ஜென் Z பசங்க போல, தலை முடியை கலைத்து சீவினாலும்... அதையும் ஸ்டைலா வைச்சுக்கோங்க. 

பிஞ்சு போன செப்பலையே தொடந்து பயன்படுத்துறது, பாலிஸ் பண்னாத ஷூ-வை போடுவதை எல்லாம் தவிர்த்துடுங்க. 

உங்க உடலும், உடையும் தான் முதல் இம்பரஷன். ஆபிஸ், பார்ட்டினு அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க. இம்பரஸ் செய்யுங்க. இதில்தான் நீங்க யார்னு தெரிஞ்சுப்பாங்க. 

3. பாடிலேங்குவேஜ் : 

உடல்மொழிக்கு நீங்க பேசுற மொழியை விட வலிமை அதிகம். முதலில் சந்திச்சதும், ஜென்டிலா ஸ்மைல் பண்ணி கான்பிடென்டா கைகொடுத்து வெல்கம் பண்ணுங்க. 

நீங்க பெண்ணாக இருந்தால், நீங்கதான் முதல்ல கையை நீட்டணும். 

'நாம கை நீட்டி அவங்க கொடுக்காம போய்ட்டா, என்ன பண்ணுறது?'னு சில ஆண்களிடம் சின்ன தயக்கம் உண்டு. 

இல்லைன்னா, சிம்பிளா 'வணக்கம்' சொல்லுங்க. 

அடுத்து அவங்க பேசும்போது அவங்க கண்ணை பார்த்து கவனமா கேளுங்க. இதுதான் அவங்க பேசுறதுக்கு நீங்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிய வைக்கும். 

ஸ்டைலா சுவத்துல சாஞ்சுட்டோ, போனை நோண்டிட்டோ, நகத்தை கடிச்சுட்டோ, தலைமுடி கூட விளையாட்டிட்டோ பேசுறதையோ தவிர்த்துடுங்க. 

சிலர், அவரை விட பெரிய நபரை சந்தித்தால் எதுக்குனே தெரியாம பதட்டபட ஆரம்பிச்சுடுவாங்க. பதட்டப்படாதீங்க.

 'என்ன பண்ணாலும் பதட்டப்படாம இருக்க முடியலை'னு சொன்னால், வடிவேலு மாதிரி பதட்டதையும், பயத்தையும் முகத்துக்கு கொண்டு வராமல் பேஸ்மென்ட்லயே வைச்சுக்கோங்க. ஸ்மைலிங் ஃபேஸோட பேசுங்க. 

2. கண்ணியமா பேசுங்க :

முதல்முறையா பேசும்போது திக்கி திணறி பேசாமல், நிறுத்தி தெளிவா பேசுங்க. குரலை அதிகம் உயர்த்தியோ, 'நான் யார் தெரியுமா?' என்ற தோரணையில் பேசாதீங்க. 

அதுபோல, உங்க சாதனை பட்டியலை அந்த 5 நிமிஷத்துல சொல்லி முடிச்சடணும்னு நினைச்சு படபடவென அடுக்காதீங்க. 

நீங்க குறைவா பேசுங்க. அவரை அதிகம் பேச விடுங்க. 

உங்களை பத்திதான் உங்களுக்கு தெரியுமே. அவரை பத்திதானே நாம தெரிஞ்சுக்கணும் என்ற மனநிலையில் இருங்க. 

உங்க சொந்த கதைகளை எல்லாம் ஃபர்ஸ்ட் மீட்லேயே சொல்லாதீங்க.

1. 'மகிழ்ச்சி'னு சொல்லுங்க : 

உங்களுக்கு அவர் போன் நம்பர் தேவைப்பட்டால், பேசி முடிச்சதும் நம்பர் கேளுங்க. 

உங்க விசிட்டிங் கார்டு, இ-மெயில் ஐடி கொடுங்க.

 நடுவுல ஏதாவது சொல்லிட்டு இருக்கும்போதே 'உங்க நம்பர் கொடுங்களேன்'னு கேட்காதீங்க. 

அவர் முதல்முறை நம்பர் சொல்லும்போதே கவனமா நோட் பண்ணிக்கோங்க. 

திரும்ப திரும்ப நம்பரை சொல்ல வைக்காதீங்க. 

இதுல நீங்க எவ்வளவு கவனமான ஆளுனு புரிஞ்சுப்பாங்க. 

உங்க நம்பரை சேவ் பண்ணுறதுக்கு அவர்கிட்ட மிஸ்டு கால் விடுவதற்கு பதிலா, 'உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி'னு உங்க பேரு போட்டு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிடுங்க. 

அவர் உங்க நம்பரை சேவ் பண்ண மறந்தாலும், நீங்க அனுப்பின மெசேஜை வைச்சு மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள வசதியா இருக்கும். 

மீட்டிங் முடிந்ததும் கை கொடுத்து விடைபெறுங்க. 'தாங்க் யூ... மகிழ்ச்சி'னு ரஜினி ஸ்டைலில் சொல்லுங்க. 

இனி என்னங்க 'First impression is the best impression'னு கெத்து காட்டுங்க

நன்றி : விகடன் செய்திகள் - (20/09/2016)

No comments:

Post a Comment