disalbe Right click

Monday, October 24, 2016

முதல் பதிவுக்கு மட்டுமே தடை


முதல் பதிவுக்கு மட்டுமே தடை - என்ன செய்ய வேண்டும்?

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்; அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது' என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.

அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு சட்டத்தின், '22 அ' பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதை அமல்படுத்த, எட்டு ஆண்டுகளுக்கு பின், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து, பதிவுத்துறை தலைவரிடம் இருந்து, சுற்றறிக்கை வரும் என, சார் பதிவாளர்கள் காத்து இருந்தனர்.

ஆனால், அரசாணை நகலின் கீழ் பகுதியில், 'தகவலுக்காக' என, குறிப்பிட்டு பதிவுத்துறை தலைவரின் பெயரில், சார் பதிவாளர்களுக்கு, நகல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், இதை அமல்படுத்துவதா, வேண்டாமா என, சார் பதிவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளில் உள்ளபடி, அங்கீகாரம் இன்றி வீட்டு மனையாக பதிவான பத்திரங்களை வைத்து இருப்பவர்கள், அடுத்தடுத்து விற்றால், அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படும்; அதற்கு தடை இல்லை. 

புதிதாக விவசாய நிலத்தை, வீட்டு மனையாக பதிவு செய்ய வரும் பத்திரங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.10.2016

No comments:

Post a Comment