பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே - ஐகோர்ட்
என்ன செய்ய வேண்டும்?
விதி மீறிய பட்டாசு கடைகளுக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதிகள், பட்டாசு விபத்துகளுக்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடையில் கடந்த அக். 20ல் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்தனர்.
இந்த மனுவுடன், கும்பகோணம் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 2013ல் நடந்த விபத்தில் உயிரிழந்த 10 சிறுவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது, திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்த மனுக்களும் சேர்த்து நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
திருச்சி கலெக்டர் பழனிச்சாமி, போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், விருதுநகர் எஸ்பி ராஜராஜன், தஞ்சாவூர் டிஆர்ஓ சந்திரசேகரன், மத்திய அரசின் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ், இணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
நீதிபதிகள்:
திருச்சியில் பட்டாசு கடை விதிமீறல் குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமுறை கடிதம் எழுதியுள்ளனர். உங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை மேற் ெகாள்ளப்பட்டது.
உதவி கமிஷனர்:
97 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. சில கடைகள் விதிமீறல் உள்ளது.
நீதிபதிகள்:
எந்த அடிப்படையில் விதிமீறல் என்கிறீர்கள்?
உதவி கமிஷனர்:
கடைகளுக்கு இடையே 3 மீட்டர் தூரமும், மருத்துவமனை, கோயில் போன்ற பகுதிகளில் 50 மீ தூரமும் இருக்க வேண்டும். சில இடங்களில் அதுபோல் இல்லை.
நீதிபதிகள்:
வெடிபொருள் விதியை பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
உதவி கமிஷனர்:
தனிப்படைகள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டுள்ள கடைகளுக்கான அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள்:
கரூரில் ஆய்வு செய்யப்பட்டதா?
சிறப்பு தாசில்தார்:
41 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில கடைகளில் விதிமீறல் உள்ளது.
நீதிபதிகள்:
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த போட்டோவில் மேல்பகுதியில் வங்கியும், கீழ் பகுதியில் பட்டாசு கடைகளும் உள்ளன. வங்கி பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பகுதி. அங்கு எப்படி அனுமதித்தீர்கள்?
சிறப்பு தாசில்தார்:
விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதிகள்:
கும்பகோணம் சம்பவம் 2013ல் நடந்துள்ளது. ஏன் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
இன்ஸ்பெக்டர்:
இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள்:
நீதிமன்றம் நடவடிக்கை எடுத்த பிறகு அவசர, அவசரமாக தாக்கல் செய்து, எண் பெற்றுள்ளீர்கள். மாஜிஸ்திரேட் படித்து பார்த்தாரா என தெரியவில்லை. அதே நேரம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சிறப்பு தாசில்தார்:
3 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி செய்யப்பட்டது.
நீதிபதிகள்:
நீங்கள் கூறுவது நிதியுதவி, நீதிமன்றம் கேட்பது இழப்பீடு. சிவகாசியில் கடந்த 2010 முதல் தற்போது வரை இறப்பு நிகழ்ந்த விபத்துகள் எத்தனை நடந்துள்ளது.
எஸ்பி:
58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16 வழக்கின் விசாரணை
சிபிஐ விசாரணையா?
நீதிபதிகள் அளித்த உத்தரவில், சிவகாசி விபத்து வழக்கை எஸ்பி மேற்பார்வையில் சிவகாசி டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்தனர்.
நன்றி : தினகரன் – 27.10.2016
No comments:
Post a Comment