Cr.P.C. section : 164 - என்ன செய்ய வேண்டும்?
குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாங்க முற்படுகின்ற போது நடுவரானவர், குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164ன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கீழ்கண்டவற்றை தெரிவிக்க வேண்டும்.
# தாங்கள் என்னிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கட்டுப்பட்டவர் அல்ல.
# தாங்கள் கொடுக்கின்ற ஒப்புதல் வாக்குமூலமானது தங்களுக்கு எதிராக சாட்சியமாக பயன்படுத்தக்கூடியது.
மேலும், யாருடைய வற்புறுத்தலுமின்றி ஷை ஒப்புதல் வாக்குமூலமானது குற்றஞ்சாட்டப்பட்டவரால் தன்னிச்சையாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மேற்கண்ட விஷயங்களை தன்முன்னால் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு படித்துக் கட்டப்பட்டு அவரால் ஒத்துக் கொள்ளப்பட்டது என்பதையும் நடுவர் ஷை வாக்குமூலத்தின் அடியில் குறிப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment