disalbe Right click

Sunday, November 20, 2016

நெட் பேங்கிங் - பணபரிமாற்றம்


நெட் பேங்கிங் - என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் மூலம் ஒரு வங்கியின் ஒரு கணக்கிலிருந்து, அதே வங்கியில் மற்றொரு வங்கி கணக்கிற்கு சுலபமாக பணத்தை மரிமாற்றம் செய்ய முடியும்.
வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கி கணக்குகளிடையே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய 
NEFT(National Electronic Fund Transfer), 
RTGS(Real Time Gross Settlement) என்ற இரண்டு முறைகள் உள்ளன.

NEFT (National Electronic Fund Transfer)
ஆன்லைனில் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கியின் கிளைக்கு மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தை அனுப்புவதற்காக முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முறை தான் NEFT(National Electronic Fund Transfer).

NEFT 2005ம் வருடம் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியினால் அறிமுகப்படுத்தபட்டது.

NEFT இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையாகும்.

NEFTன் அடிப்படை IFSC(Indian Financial System Code) ஆகும்.

IFSC என்பது, 11இலக்கங்கள் கொண்ட எண்ணாலும், எழுத்தாலும் ஆனா ஒரு குறியீட்டு எண்ணாகும். 

இதில் முதல் 4 இலக்கங்கள் வங்கியின் பெயராக இருக்கும். இந்த 4இலக்கங்களுக்குப் பின் ஒரு பூஜ்ஜியம் இருக்கும். அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் வங்கியின் கிளையைக் குறிக்கும்.

உதாரணத்திற்கு CUB00000104 என்ற அக்கவுன்ட் எண்ணில், 
CUB என்பது சிட்டி யூனியன் பேங்க் என்பதையும். 
அதப் பின் ஒரு பூஜ்ஜியமும், அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் சிட்டி யூனியன் பேங்க் தமிழ் நாடு, 
சென்னை, நங்கநல்லூர் கிளையையும் குறிக்கிறது.

இந்த IFSC எண் வங்கிக் கணக்குப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். வங்கியில் நேரிடையாக அல்லது http://bankifsccode.com/ என்ற இணையத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

NEFT செயல்படும் முறை
நாம் ஒரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம், மற்றொரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியவுடன், அந்த தகவல் NEFT சேவை மையத்திற்கு (NEFT service centre) செல்லும்.
இந்த தகவலைப் பற்று கொள்ளும் NEFT சேவை மையம் அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு (NEFT Clearing Centre)க்கு அனுப்பி வைக்கும்.

இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
இப்போது NEFT பட்டுவாடா மையம், வங்கி வாரியாகக் கணக்கினைத் தயார் செய்யும், அதாவது எந்த வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்ற பட்டியல் தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய வங்கிக்கான பட்டியல் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெரும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்த பணத்தைக் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கிரெடிட் செய்துவிடும்.

அதாவது அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய்விடும். அம்மையம் அவற்றை உடனடியாக செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல்படுத்தும்.

எனவே, NEFT மூலம் நாம் பரிவர்த்தனை செய்யும் பணம் உடனுக்குடன், பட்டுவாடா செய்யப்பட மாட்டாது. குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப் படுகிறது.

NEFT – சில முக்கிய தகவல்கள்
NEFT மூலம், வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணம் அனுப்பலாம். 9.00/ 11.00/ 12.00/1.00 /3.00 /5.00 என்று வார நாட்களில் 6 சுற்றுக்களில் பணப்பரிமாற்றம் நடைபெறும். உதாரணத்துக்கு 1.05க்கு நாம் பணம் அனுப்பினால் அது 3 மணி சுற்றில் சேர்ந்து விடும். 5 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகி விடும்.

சனிக்கிழமைகளில் 9.00 மணி 11.00 மணி, 12.00 மணி என்று 3 சுற்றுக்களில் பணபரிமாற்றம் நடைபெறும். உதாராணத்துக்கு 12.05 மணிக்கு நாம் பணம் அனுப்பினால், அது வங்கியின் அடுத்த வேலை நாளான திங்கள் அன்று 9 மணி சுற்றில் தான் வரும். 11 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகிவிடும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.

NEFT மூலம் குறைந்தபட்சத தொகையாக 1ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,00,௦௦௦ லட்சம் ரூபாய் வரை பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணபரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் NRE, NRO கணக்குகள் வைத்திருந்தால், அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும்.

NEFT மூலம் அனுப்பபடுகின்ற பணத்தை பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் பணத்தை அனுப்புபவருக்கு சேவை கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.

வங்கியில் Savings Account, Current Account, ODCC Account, NRE, NRO வைத்திருப்பவர்கள் NEFT மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Muhammadh

நன்றி : ஆதிரைப்பிறை - 08.09.2015

No comments:

Post a Comment