disalbe Right click

Friday, December 30, 2016

மேட் நுழைவுத் தேர்வு - 2017


மேட் நுழைவுத் தேர்வு - 2017


நாட்டின் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், உங்களுக்கு படிக்க விருப்பமா? உங்களது பதில் ‘ஆம்’ எனில், ‘மேட்’ எனும் மேலாண்மை நுழைவுத் தேர்வை எழுதலாம்!

அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு, மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட்). இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.

அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பாக ஆண்டுக்கு நான்கு முறை- பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும், இந்த நுழைவுத் தேர்வை, லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.

மாணவர்கள் ஒரு முறை இந்த தேர்வு எழுதிப் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, ஒரு ஆண்டு வரை பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு, இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு விவரம் 

தேசிய அளவில் நடைபெறும் இத்தேர்வினை, மாணவர்கள்  தாள் அடிப்படையிலும் (பேப்பர் பேஸ்ட் டெஸ்ட்) அல்லது கணினி அடிப்படையிலும் (கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட்) தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து, எழுதலாம்.

லாங்க்வேஜ் காம்பிரிஹென்சன், மேத்மேட்டிக்கல் ஸ்கில், டேட்டா அனலைசஸ் அன்ட் டேட்டா சவ்பீஸியன்சி, இன்டலிஜென்ஸ் அண்ட் கிரிட்டிக்கல் ரீசனிங், இந்தியன் அன்ட் குளோபல் என்விராண்மெண்ட் ஆகிய ஐந்து பிரிவுகளில், ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 40  கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

நுழைவுத் தேர்வு நாள்

காகித அடிப்படையிலான எழுத்துத்தேர்வு - பிப்ரவரி 5

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு- பிப்ரவரி 11

விண்ணப்பிக்கும் முறை: 

www.apps.aima.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: ஜனவரி 27, 2017

மேலும் விவரங்களுக்கு: www.apps.aima.in

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.12.2016

No comments:

Post a Comment