கால் புண்ணிலிருந்து நீரிழிவு நோயாளி தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
முற்றிய நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவமனையில் சேரும்படி ஆவதற்கு கால் புண்களும் ஒரு காரணம்.
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு, கால்கள் வீக்கமடைவதுண்டு. சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால் வீடு, அலுவலக சூழலில் இது முடியாமல் போய்விடுகிறது.
இந்த தேவையை நிறைவு செய்ய, 'சைரன் கேர்' என்ற நிறுவனம், கால்களில் அணியும் 'ஸ்மார்ட் சாக்ஸ்' ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த 'புத்திசாலி' காலுறைகளில் உணர்வான்களும், சிறு மின்கலனும், ஒரு மொபைல் செயலிக்கு தகவல் அனுப்பும் சாதனமும் இருக்கும். இதை அணிந்த சர்க்கரை நோயாளியின் கால்களில் ஏற்படும் மாற்றங்களை காலுறைகள் மொபைல் செயலிக்கு, 'புளூ டூத்' மூலம் செய்தி அனுப்பும்.
கால்களின் வெப்பநிலை அதிகரித்தால் உடனே சிகிச்சை பெற்று கால்களின் வீக்கத்தை தணிக்கலாம்.
ஒரு ஜோடி ஸ்மார்ட் சாக்சை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அதுவரை, அழுக்கானால் துவைக்கும் இயந்திரத்தில் கூடப் போட்டு துவைக்க முடியும்.
காலுறைகளை கழற்றினால் மின்கலனில் உள்ள மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். ஏழு ஜோடி காலுறைகளை ஒரே பெட்டியாக விற்க திட்டமிட்டிருக்கிறது சைரன் நிறுவனம்.
ஒரு பெட்டியின் விலை 8,130 ரூபாய். டென்மார்க் மற்றும் அமெரிக்காவிலிருந்து இயங்கும் சைரன் நிறுவனத்தின் காலுறைகள், 2017ல் விற்பனைக்கு வரும். இது இந்தியாவிலும் கிடைத்தால், பல நீரிழிவு நோயாளிகள் கால் புண்களில் இருந்து தப்பிக்க உதவும்.
நன்றி ; தினமலர் நாளிதழ் – 08.12.2016
No comments:
Post a Comment