கல்லூரி மாணவ மாணவியருக்கு ஸ்காலர்ஷிப்
கோவை: மத்திய அரசின்,’பிரகதி’ மற்றும் ’சாக் ஷாம்’ திட்டத்தில், பாலிடெக்னிக், இன்ஜி., கல்லுாரி மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) வெளியிட்டுள்ளது.
’பிரகதி’ திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முதலாமாண்டில் சேர்க்கை பெற்றுள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம். ஒற்றை பெண் குழந்தையாகவும், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியாக கருதப்படும்.
’சாக்ஷாம்’ திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவராக இருப்பதுடன், அவரது குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டியது அவசியம். தகுதியுள்ள மாணவர்கள், ’ஆன்-லைன்’ மூலம், 2017, ஜன., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு www.aicte-india.org என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) – 22.12.2016
No comments:
Post a Comment