நவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை
புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது.
எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது. இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது:
நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும்.
இதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி செயல்படுகிறது?
இந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை. அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க வேண்டும்.
வாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும்.
'ஸ்வைப்பிங் மிஷின்' தீவிரம்
'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 24.12.2016
No comments:
Post a Comment