disalbe Right click

Wednesday, December 28, 2016

லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. கைது


லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. கைது

வழக்கு விரைவாக விசாரிப்பு, ரூ.50 ஆயிரம் லஞ்சம், டிஎஸ்பி கைது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடவடிக்கை


வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதி யைச் சேர்ந்தவர் எம்.எஸ்.குமரேசன். இவரது மனைவி சுஜாதா பெயரில் அரப்பாக்கத்தில் 7, 548 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்றுத் தருமாறு ஆற்காட்டைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு சுஜாதா பவர் பட்டா எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி, அந்த நிலத்தை விற்ற அஜய், நிலத்துக்குரிய பணத்தை சுஜாதாவிடம் கொடுக்கவில்லை.

இதையறிந்த குமரேசன் நிலத்துக் கான பணத்தை அஜய்யிடம் கேட் டுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அஜய் தம்பதியை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, வேலூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் சுஜாதா புகார் செய்தார். அதன்பேரில், அஜய் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி போலீஸார் வழக் குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அஜய்யை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு போலீஸாரிடம் குமரேசன் கேட்டுள் ளார். அதற்கு, ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் விரைவாக விசாரிப்ப தாக துணை காவல் கண்காணிப் பாளர் உஸ்மான் அலிகான் தெரிவித் துள்ளார்.

ரூ.3.50 லட்சம் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்ட குமரேசன், வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அவரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கொடுத்தனுப்பினர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் உஸ்மான் அலிகான் நேற்று அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் வாங்கிய வழக்கில் உஸ்மான் அலிகானை கைது செய்தனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 28.12.2016

No comments:

Post a Comment