போலீஸில் புகார் அளித்தால் SMS
காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை, அவர்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிந்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல் துறையின் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
காவல் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் செய்யும் பொதுமக்களின் கால விரையத்தை குறைப்பதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளித்தால், அந்தப் புகார் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, அவர்களது செல்லிடபேசிக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த குறுஞ்செய்தி TNPOL என்ற பெயரில் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு அனுப்பப்படும்.
காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்தப் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வழக்குகளின் சி.எஸ்.ஆர்., எப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிக்கை என ஒவ்வொரு நிலை குறித்தும் புகார்தாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த குறுஞ்செய்தி இப்போது ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பப்படுகிறது. விரைவில் தமிழிலும் அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் - 24.12.2016
No comments:
Post a Comment