மனித உடல் - பயோடேட்டா
நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
⧭மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.
⧭மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
⧭மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
⧭மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.
⧭மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.
⧭மனித மூளையின் எடை 1.4 கிலோ.
⧭உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 KF.
⧭மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்
⧭உடலின் மெல்லிய சருமம் கண் இமை.
⧭மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.
⧭ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
⧭மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது.
⧭நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
⧭மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.,
⧭ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர்.
⧭மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
⧭நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
⧭நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
⧭நம் உடல் எடையில் 9 சதவிகிதம் ரத்தத்தினால் ஆனது.
⧭இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
⧭நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
⧭நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
⧭நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது.
⧭நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
⧭ நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.
⧭ நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
⧭ உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.
⧭ வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.
⧭ நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது.
⧭ மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.
⧭ மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
⧭ மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன்.
⧭ ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
⧭ மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
⧭ ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
⧭ நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோ மீட்டர் தூரம்.
⧭அதுபோல தும்மும் போது, கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.01.2017
No comments:
Post a Comment