திருநங்கைகள் நல வாரியம்
இந்த உலகத்தில் ஆணாகவுமில்லாமல், பெண்ணாகவுமில்லாமல்
திருநங்கையாக மாறி, பிறந்த வீட்டிலும், சமூகத்திலும் ஆதரவு இல்லாமல் பரிதாபமாக வாழ்கின்ற இவர்களுக்கு நமது தமிழக அரசு ஒரு நல வாரியத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை சிறக்க உதவி வருகின்றது. உங்களுக்குத் தெரிந்து யாராவது இருந்தால், அவர்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி கீழ்க்கண்ட சலுகைகளை பெற உதவுங்கள்.
*********************************அன்புடன் செல்வம்பழனிச்சாமி*******
மாற்றுப்பாலினத்தைச் சார்ந்த 4 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப் பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது.
இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.
சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம் வரை கடனுதவி,
தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள் தங்குவதற்கென தற்காலிக விடுதி,
அடையாள அட்டை
இலவச பட்டா வழங்குதல்,
வீடு வழங்கும் திட்டம்,
சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
ரேஷன் கார்டு வழங்குதல்
வாரியம் வழங்கி்ய உதவிகள்
இந்த வாரியமானது கடந்த 2012 முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு என அடையாள அட்டைகளையும் வழங்கி வருகிறது.
இதுவரை, சென்னை-794, கோவை-332, மதுரை-274, நாமக்கல்-159, விழுப்புரம்-175, சேலம்-189, விருதுநகர்-175 என 32 மாவட்டங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 719 மாற்றுப்பாலினத்தவர்களை கண்டறிந்து உறுதிசெய்துள்ளது.
மேலும், திருநங்கைகள் சமூகத்தில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது.
அடையாள அட்டை
தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் சமூகநலம், சத்துணவு திட்டத் துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில், பிறப்பு பெயர், அரவாணி பெயர், தற்போதைய, நிரந்தர முகவரி, உறுப்பினர் எண், உறுப்பினர், மாவட்ட சமூக நல அலுவலரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், 1,559 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 1,084 திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டாவும், 108 திருநங்கைகளுக்கு தையல் இயந்திரமும், 659 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
தொகுப்பு வீடுகள்
133 திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ 99 லட்சத்து 75 ஆயிரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
திருநங்கைகள் சுய உதவிக்குழு
இதுவரை, 442 திருநங்கைகளுக்கு ரூ. 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெட்டிக்கடை, மளிகைக்கடை, உணவகம், துணி வியாபாரம், பால் வியாபாரம், வேளாண் பொருள்கள் விற்பனை, அழகு நிலையம், சோப்பு வியாபாரம், செங்கல் சூளை அமைத்தல் உள்ளிட்ட சுய தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன
தகவல் : http://ta.vikaspedia.in/ இணையதளத்திலிருந்து.
No comments:
Post a Comment