தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை
கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், முகத்திலும், கழுத்திலும்
காயமேற்பட்டு, சில
நாட்களில் சரியானது. ஆனால், காயத்தால்
ஏற்பட்ட தழும்பு மட்டும் ஆறாமல், அவரையும், அவரது பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இவ்வகையான
காயங்களால், ஆறு
மாதத்தில் தழும்பு பெரிதாவது நின்றுவிடும். இதை, 'ஹைப்பர் ட்ராபிக்' தழும்பு என்போம். ஆறு மாதங்களுக்கு பின்னும் வளர்ந்து கொண்டே
செல்லும் தழும்புகளை, 'கீலாய்டு' தழும்பு என்கிறோம். இத்தகைய தழும்புகள், பாதிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, சாதாரண திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
விபத்து, தீக்காயம் அல்லது சாதாரண காயங்கள் பட்ட இடத்தில் திசுக்கள்
இறுகுவதால், செயல்பட
முடியாமல் போகும். அங்கிருக்கும் நரம்புகளும் பாதிப்படைவதால், வலி இருந்து கொண்டே இருக்கும்; பார்க்கவும் அருவருப்பாக இருக்கும். இதற்காக, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்த சிகிச்சையில், உடலின் மற்ற பகுதியில் இருந்து தோல் மற்றும் சதையை
அறுத்தெடுத்து, பாதிக்கப்பட்ட
இடத்தில் வைக்க வேண்டும். இதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடம் மட்டும் அல்லாது, அறுவை சிகிச்சைக்காக சதை எடுக்கப்பட்ட இடமும் குணமாக வேண்டும்.
ஆனால், தற்போது, 'லேசர் ஸ்கார்' விரிவாக்கம் சிகிச்சையின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிறமாற்றத்தை
சரிசெய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், அதிக அழுத்தமாக இருக்கும் இடத்தை மென்மையாக்கலாம்.
இதில், மிக சாதாரண மயக்க
நிலையிலும்,
மரத்துப் போகும் ஊசியும் போட்டு, தீப்புண்
தழும்பு, நிறமாற்றம், வளர்
தழும்பு, திசுவறைப்
பெருக்கம், அறுவை
சிகிச்சை தழும்புகள், புற்று நோய்க்காக எடுத்துக்
கொள்ளப்பட்ட சிகிச்சையில் ஏற்படும் தழும்புகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம்.இதற்காக, ஒரு
நாள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து, வீட்டிற்கு
திரும்பி விடலாம். இந்தச் சிகிச்சையின் சிறப்பே, தழும்புகளை
அகற்றுவது தான்!
எஸ்.கிருத்திகா
ரவீந்திரன்,
அழகு சீரமைப்பு நிபுணர், சென்னை.
74027 23411
அழகு சீரமைப்பு நிபுணர், சென்னை.
74027 23411
நன்றி
: தினமலர் நாளிதழ் - 13.01.2016
No comments:
Post a Comment