ஒரே சமயத்தில் 100 மெயில்கள் ஃபார்வர்டு செய்ய
ஒருநாளைக்கு நிறைய மெயில் வரும். எல்லாத்தையும் படிக்கக்கூட நேரமில்லாம இருப்போம். சில சமயங்கள்ல முக்கியமான மெயில் எல்லாம் லேபிள் பண்ணிகூட வைப்போம். ஆனா திடீர்னு ஒருநாள் வேற ஆபீஸ் மாறும் சூழல் வருது அல்லது புதுசா சேர்ந்திருக்குற சக ஊழியருக்கு படிக்க கொடுக்க வேண்டிய நோட்ஸ் 50 மெயில ஒண்ணு ஒண்ணா ஃபார்வர்டு பண்ணுறது கஷ்டம். இந்தப் பிரச்னைக்கு ஜி-மெயில்ல ஒரு ஆப்ஷன் இருக்கு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆமாம் பாஸ். ஜி-மெயில்ல நாலஞ்சு மெயில செலக்ட் பண்ணிட்டு ஃபார்வர்டு ஆப்ஷன் எங்கனு தேடிட்டு இருக்கீங்களா? அதுக்கு தீர்வு இருக்கு. அதுக்கு நீங்க செய்ய வேண்டியுதெல்லாம் சிம்பிளான விஷயம் தான். உங்களோட க்ரோம் ப்ரெளசர்ல செட்டிங்ஸ் போங்க. அதுல இருக்குற எக்ஸ்டென்ஷன்ல ''மல்டி ஃபார்வர்டு ஃபார் ஜிமெயில்னு'' டைப் பண்ணுங்க.
கீழ இருக்கிற ஸ்க்ரீன் ஷாட்ல இருக்குற ''மல்டி ஃபார்வர்டு ஃபார் ஜி-மெயில்'' எக்ஸ்டென்ஷன இன்ஸ்டால் பண்ணுங்க. அதனை ரன் பண்ணா நம்மோளோட ஜிமெயில் யூஸ் பண்ண ஆக்ஸஸ் கேட்கும். அதை அனுமதித்தால் போதும்.
பிறகு உங்கள் கணக்கிலிருந்து நிறைய மெயிலை செலக்ட் செய்யுங்கள். இப்போது ஒரு ஃபார்வர்டு ஐகான் உங்களது டேப்பில் தோன்றியிருக்கும். அதனை க்ளிக் செய்தால் இத்தனை மெயில்களையும் யாருக்கு அனுப்ப வேண்டும் என கேட்கும். அதில் நீங்கள் அனுப்ப விரும்பும் மெயில் ஐடியை கொடுத்தால் அத்தனை செய்திகளும் அந்த ஐடிக்கு ஒரே க்ளிக்கில் சென்றுவிடும்.
இதில் 100 மின்னஞ்சல்களை தான் ஒரே சமயத்தில் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒன்று ஒன்றாக அனுப்புவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்துபவர்கள். இந்த வசதி கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நேரத்தை மிச்சப்படுத்தும்
ஸ்டெப் 1:
ஸ்டெப் 2:
ஸ்டெப் 3:
ஸ்டெப் 4:
ஜி-மெயிலில் இருக்கும் இந்த வசதி, உங்கள் அலுவலக மெயிலுக்கு பொருந்துமா ?
உங்கள் அலுவலக டொமைனில் உள்ள ஐடி ஜி-மெயிலாக இருந்தால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டியது தவறான எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்து உங்கள் தகவல்களை இழக்காமல் இருப்பது தான். எக்ஸ்டென்ஷன்கள் எல்லாமே மூன்றாம் நபர் அப்ளிகேஷன்கள் தான் என்றாலும் அதில் நல்ல ரிவியூ, ரேட்டிங் உள்ள எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துங்கள்.
ஜி-மெயிலின் இன்னோரு போனஸ் ட்ரிக்:
சில பேரோட ஜி மெயில் ஐடில டாட் இருக்கும். உதாரணமா yourname.lastname@gmail.com இப்படினு ஒரு மெயில் ஐடி வைச்சிருக்கலாம். இனிமே நீங்க யார்கிட்டயும் இந்த டாட் அழுத்தி சொல்லணும்குற அவசியம் இருக்காது. இ-மெயில் ஐடிகளில் டாட் இருப்பது காலம் காலமாக இருக்கும் விஷயம் தான். இதில் என்ன புதியது என்றால் உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு தான் வரும்.
நன்றி : விகடன் செய்திகள் - 28.02.2017
No comments:
Post a Comment