வருமானத்தை மீறிய சொத்து மதிப்பிடப்படுவது எப்படி?
மாநில ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்
துறையின்உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு அதிகாரி அல்லது அரசியல் ரீதியாக பதவி வகிக்கும் ஒருவரின் மாத வருமானம், 70 ஆயிரம் ரூபாய் என, வைத்துக் கொள்வோம். இதை, 12 மாதத்துக்கு கணக்கிட் டால்,
(12 x Rs.70,000 = Rs. 8,40,000/-)
8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்; இதுவே, இவரது ஆண்டு வருமானம்; அதாவது வருவாய். இவருக்கு மனைவி, கல்லுாரிகளில் படிக்கும் இரு பிள்ளைகள், வயதான தாய், தந்தை இருப்பதாக கொள்வோம்.
மாதம்தோறும் குடும்பம் நடத்துவதற்கான செலவு, பிள்ளைகளின் படிப்புக்கான செலவு, தாய், தந்தையருக்கான மருத்துவ செலவு, வீடு, வாகன கடன் அடைப்பு உள்ளிட்ட, அத்தியாவசிய செலவுகள், 50 ஆயிரம் ரூபாய் ஆவதாக கணக்கிட்டால், ஆண்டுக்கான மொத்தச் செலவு, ஆறு லட்சம் ரூபாய். இதை, மொத்த வருமானம், 8 லட்சத்து, 40 ஆயிரத்தில் இருந்து கழித்தால், 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மீதமிருக்கும்; இதுவே, இவரது சேமிப்புத் தொகை.
Rs. 8,40,000/-
12 x Rs.50,000 = Rs. 6,00,000/-
Balance Rs. 2,40,000/-
ஆனால், அதிகப்படியாக,
அதாவது, 30 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக வைத்துக் கொண்டால், 2 லட்சத்து, 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் பணம், நகை, சொத்துக்கள், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டவை.
அதாவது, அந்த நபர், தன் பதவியை பயன்படுத்தி, லஞ்சம், ஊழல் மூலமாக திரட்டப்பட்டவை. இந்த கணக்கீட்டின்படியே, சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஒருவேளை, அதிகாரியின் மனைவி, திருமண மாகாத மகன் அல்லது மகள், வேலைக்குச் செல்பவராகவோ அல்லது தொழில் செய்பவராகவோ இருப்பின், அவர்களது வருமானமும் மேற்கண்டவாறே
கணக்கிடப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.02.2017
No comments:
Post a Comment