நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும்
10 முக்கியத் தகவல்கள் - சட்டம் என்ன சொல்கிறது?
1985ல் உருவாகி, 2003ல் திருத்தப்பட்டது கட்சித் தாவல் தடை சட்டம்
கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக விலகினால் பதவி பறிபோகும்
கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி பறிபோகும்
சட்டமன்ற / நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தால் பதவி தப்பும்
ரகசிய வாக்கெடுப்பா, வெளிப்படையான வாக்கெடுப்பா என்பது சபாநாயகரின் முடிவு
சபாநாயகரின் முடிவு இறுதியானது - ஆனால் நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் மறுபரீசலனை செய்யலாம்
அவையில் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும், வாக்கு செல்லும்.
கொறடாவின் உத்தரவை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமுன் நோட்டிஸ் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
மீறிய உறுப்பினர்களை சபாநாயகர் மன்னிக்கவும் வழிவகை உண்டு.
கட்சியிலிருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களை கொறடா கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு விடையில்லை.
நன்றி : BBC - தமிழ் - 17.02.2017
No comments:
Post a Comment