மாணவர் விசா நடைமுறைகள்
தங்களின் உயர்கல்வியை வெளிநாட்டில் தொடர விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் பிரதான தேர்வு அமெரிக்கா!
சர்வதேச தர வரிசை பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஏராளமான சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், அமெரிக்காவில் செயல்பட்டு வருவதே இதற்கு காரணம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல், மாணவர் விசா பெறுவதற்கான செயல்முறைகளையும் அறிந்து கொள்வதும் அவசியம்.
விசா செயல்முறைக்கு
அதிக நாட்கள் தேவைப்படுமா?
தூதரக மின்னணு விண்ணப்ப மைய இணையதளத்தில்,
விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின், அவர்களுக்கு இரண்டு அழைப்பு நேரங்கள் ஒதுக்கப்படும்.
முதல் அழைப்பில், விசா விண்ணப்ப மையத்தில் விண்ணப்பதாரர்கள் கைரேகை, புகைப்படம் போன்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாம் அழைப்பில், அமெரிக்க துணைத் தூதரகத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்களின் நேர்காணல் முடிவடைந்து விசா ஒப்புதல் பெற்ற பின் ஒரு வாரத்திற்குள் அவர்கள் பாஸ்போர்ட்டை
பெற்று கொள்ளலாம்.
நேர்காணலில் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும்?
ஒவ்வொரு மாணவர்களின் எண்ணங்கள் மாறுபடும் என்பதால் சாரியான பதில் இதுதான் என்று எதுவும் இல்லை. விசா அதிகாரிகளிடம் தேர்வு செய்திருக்கும் கல்லூரிகள் மற்றும் நிதி ஏற்பாடுகளை குறித்து நேர்மையாக அமெரிக்கா செல்வதற்கான உங்களது திட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் சரி!
நேர்காணலின் போது என்ன கொண்டு செல்ல வேண்டும்?
மாணவர்கள் தேர்வு செய்த, பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் வழங்கிய ஏற்பு கடிதம், ஐ-20 படிவம், தகுதி தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களைக் கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை, அமெரிக்க துணைத் தூதரகத்தில், நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 விசா நேர்காணல்கள் நடைபெறும். இதிலிருந்து, ஐந்து நிமிடங்களே நீடிக்கும் ஒரு விசா நேர்காணலில், விசா அதிகாரியின் கேள்விகளுக்கு
மாணவர்கள் துல்லியமாகவும்
மற்றும் முழுமையாகப் பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர முடியும்.
பயணத்தின் போது தேவைப்படும் ஆவணங்கள்?
விசா ஒப்புதல் பெற்ற பின் அமெரிக்கா செல்வதற்கு, உங்களை தயார்படுத்தி
கொள்ள வேண்டும்.
இமிகிரேஷன் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் ஐ - 20 படிவம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மேலும், மாணவர் மற்றும் பரிவர்த்தனை பார்வையாளர் தகவல் அமைப்பில் (ஸ்டூடன்ட் அண்ட் எக்ஸ்சேன்ஞ் விசிட்டர் இன்பர்மேஷன் சிஸ்டம்) செலுத்தியதற்கான கட்டண ரசீதை பாஸ்போர்ட்டுடன் வைத்திருக்க வேண்டும்.
வேறு என்ன தெரிய வேண்டும்?
அமெரிக்க கல்வி முறை மற்றும் கலாச்சாரத்தை
பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். மேலும், பயணத்திற்கு முன்பு எஜூகேஷன் யு.எஸ்.ஏ., நடத்தும் விளக்க உரையில் பங்குபெறுவது சிறந்தது. அந்தந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் சார்பில் நடைபெறும் முன்னாள் மாணவர் நிகழ்வுகள், தகவல் பரிவர்த்தனை போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது!
மேலும் விவரங்களை பெற:
in.usembassy.gov/visas மற்றும்
educationusa.state.gov
-அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 20.12.2016
No comments:
Post a Comment