பவர் பத்திரம் பவர் இழக்கும் தருணங்கள்
1. பவர் எழுதிக் கொடுத்தவர் அதனை எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யும் பொழுது.
2. பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோ எதிர்பாராவிதமாக இறந்துவிடும் பொழுது.
3. பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோ எதிர்பாராவிதமாக புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது அல்லது நொடித்து போகும்பொழுது.
4. பவர் பத்திரத்தை பல நபர்கள் எழுதிக் கொடுத்து அப்படி எழுதிக் கொடுத்தவர்களில் யாராவது ஒருவர் எதிர்பாரா விதமாக இறந்துவிடும் பொழுது அல்லது புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது
5. பவர் பத்திரத்தை பல நபர்கள் பெயரில் எழுதி வாங்கி, அப்படி எழுதி வாங்கியவர்களில் யாராவது ஒருவர் எதிர்பாராவிதமாக இறந்துவிடும் பொழுது அல்லது புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது.
6. பவர் பத்திரம் எழுதப்பட்ட நாளில் இருந்து (எழுதப்பட்ட நாளையும் கணக்கில் சேர்த்து) 120 நாட்களுக்குள் பதிவு செய்யப்படாத பொழுது.
*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment